Thursday, August 31, 2006

வெற்றிப் படமா வேட்டையாடு விளையாடு?

வேட்டையாடு விளையாடு வெற்றிப் படமா? வசூலை வாரிக் குவிக்கிறதா?
எனது முந்தைய பதிவு (கககபோ) ஒன்றுக்கு இன்று காலையில் வந்த பின்னூட்டம் இது:

'Gowtham,
Though VV suffered losses before release, we hear that the profits earned in first 3 days of release is close to 12 crores. Chennai, Coimbatore, Chengalpet matrum sila 'A' centregalilum, Kerala,Karnataka, US&Singaporilum padam bayangara vetriyaame? Unmaya? Konjam thelivu paduthungalen! '
எழுதியிருப்பவர் கிருஷ்ணா என்ற நண்பர்.

சரி, அவரது கேள்விக்கு கொஞ்சம் பதில் தேடினேன்.

விசாரித்த திசைகளில் எல்லாம் கிடைத்தது "YES".

படம் நன்றாக அறுவடை செய்து கொண்டிருக்கிறது. சென்னை சத்யம் தியேட்டர் மேனேஜரான முனி கண்ணையா, "டிக்கெட் கேட்டு போன் செய்யும் பிரபலங்களிடமிருந்து தப்பிக்க இது வரை எந்தப் படத்துக்கும் இந்த மாதிரி நான் தடுமாறியதில்லை. அவ்வளவு டிமாண்ட்" என்கிறார். வேறு எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்காமல் காசி'யில்தான் நான் பார்க்க நேர்ந்தது!

தயாரிப்பாளர் நாராயணனிடம் பேசியபோது, "எல்லா தியேட்டர்களிலும் நல்லா போய்ட்டு இருக்கதா சொல்றாங்க. வெளிநாடுகளிலும் இதே நிலைதான். மலேஷியாவில் மட்டுமே முப்பத்தாறு தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். இன்று வரை டிக்கெட்டுக்கு டிமாண்ட்தான். டிஸ்ட்ரிபியூட்டர்கள் சந்தோஷமாகச் சிரிக்கிறார்கள். அவ்வகையில் எனக்கும் சந்தோஷமே" என்றார் என்னிடம்.

அநேகமாக இவருக்கு மிஞ்சி இருப்பது இந்த சந்தோஷம் மட்டும்தானோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது!

காரணம்.. பேசியபடி பழைய தொகைக்கே டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் படத்தைக் கொடுத்துவிட்டார் நாராயணன். அதிக பட்சமாக இரண்டு கோடிகள் நஷ்டம் ஆகலாம். சரி, பரவாயில்லை. ரிலீஸ் செய்து விடலாம் என்ற எதிர்ப்பார்ப்போடு பேசப்பட்ட வியாபாரம் அது. ஆனால் இப்போது வந்து நிற்கும் நஷ்டக் கணக்கு.. சுமார் ஏழரைக்கோடிகள்!! முரட்டு சொத்துக்களைக்கூட விற்றுத்தான் படத்தை வெளியிட்டிருக்கிறார் நாராயணன்.

இவ்வளவு பணம் கூடுதலாக நஷ்டம். அதனால் முன்பு பேசிய தொகையைவிட கூடுதலாகத் தாருங்கள் என விநியோகஸ்தர்களிடம் கேட்கவில்லையாம் நாராயணன்.

அதனால் எவ்வளவுதான் கோடி கோடியாக லாபம் வந்தாலும் அதெல்லாம் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்குமே போய்ச்சேரும்.
தயாரிப்பாளருக்கு 'சந்தோஷம்' மட்டுமே!

இந்தி மற்றும் தெலுங்கு உரிமைகளும் சாட்டிலைட் டெலிவிஷன் உரிமையும் (அதிலும் ஒரு கோடி ரூபாயை காஜா மொய்தீன் முன் பணமாக் வாங்கிக் கொண்டு விட்டாராம் ஏற்கெனவே!) கையில் இருக்கிறதாம். அதில் கிடைக்கக் கூடும் ஒரிரு கோடிகள் ஏழரை நஷ்டத்தில் கொஞ்சம் லாபமாகலாம்!
தீமையில் துளி நன்மை!!

22 comments:

கார்த்திக் பிரபு said...

nalla padam eppdohumeu verriyadaiyum..nalla manadhudaiya thayaripaalarukku enrumey nallthu nadakum

Unknown said...

தயாரிப்பாளரின் ஒரே மனத்தைரியத்தைப் பாராட்டி தமிழ் மக்கள் கொடுத்தப் பரிசு தானோ இந்த வெற்றி...

ஆரம்பத்தில் இருக்கும் இந்த வேகம் அடுத்து வரும் வாரங்களிலும் இருக்குமா?

WILL VV BE ABLE TO SUSTAIN ITS INITIAL BULL RUN?

rajkumar said...

Dear Goutham?

Is it 12 crore collection or 12 crores profit. I think it is only collection.

To judge the real trend, we need to wait for two weeks.

The report given by Sify states that the collection was 75% to 80% in Southern tamilnadu . If this is true, it is not a good news.

This movie wil be a A centre hit i think.

Regards

Rajkumar

Anonymous said...

நான் வேண்ணா தயாரிப்பாளருக்கு கடன் தரட்டுமா ?

Anonymous said...

Sify report is total waste because they mentioned that in Trichy and Madurai, they told its 80% collection. But some of my friends told they were not getting tickets anywhere in those cities!

Padam SAKKAI podu poduthungovvv!

Anonymous said...

//அன்புச்செல்வன் said...
நான் வேண்ணா தயாரிப்பாளருக்கு கடன் தரட்டுமா ? //

அவர என்னை மாதிரி எல்லாம் மிரட்டமுடியாது

அருண்மொழிவர்மன் said...

கனடாவிலும் நன்றாக போகிறது. வார நாட்களிலும் ஹவுஸ் fபுல்லாக ஓடுகிறது. டிச்க்செட் காசும் வழமையாக $10 இதற்கு $12
http://solvathellamunmai.blogspot.com/2006/08/blog-post_28.html

Maya said...

வெற்றிப் படமாக இருக்கலாம்..ஆனால் நல்ல படம் கிடையாது..துள்ளுவதோ இளமை கூட வெற்றிப் படம்தான்..என்ன அதனுடைய வெற்றியின் ரகசியம் வேறு..இதனுடையது வேறு..ஆனால் கஸ்தூரிராஜா அந்தப் படத்தை காப்பி அடிக்கவில்லை..இந்த கேரக்டர்க்காக் யோசித்து யோசித்து கதை எழுதினேன் என்று 'கதை' விட வில்லை..

வெற்றிப் படங்கள் எல்லாம் மிகச் சிலதுதான் நல்ல படமாக இருந்திருக்கிறது..ஆனால் நிறைய நல்ல படங்கள் வெற்றிப் படங்களா இல்லாமல் போந்து தமிழ் சினிமாவின் துரதிஷ்டம்.

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

Anonymous said...

Mayakooththan,
VV is a decent masala and its way better than Tamil Filmdom nowdays. Kamalhaasan has been part of so many good movies which failed in BO and he needs a hit then and there to do good movies. VV might not satisfy everybody but it satisfied his fans and money paying public. Kamal can't do Anbe sivams for elite people everytime and will take financial risk for the sake of taking it! Go without much expectations, you will come back satisfied with VV!

Anonymous said...

Whether Goutham said, he thought about the story sincerely and this movie is going to be a pathbreaking story! Gautham has given a decent flick with Kamal as the lead actor and considering the production problems this movie went thru, the end product is satisfactory and well received by audience! Kamal can't churn out Artsy films to satisfy the elite audience everytime and end up with a failure flick.

வலைஞன் said...

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வேறு பிரச்சினை செய்து இருப்பதாக பத்திரிகைச்செய்தி பார்த்தேன். பாவம் தயாரிப்பாளர் பாடு. சின்னச்சின்ன படங்களாக எடுத்துக் கொண்டிருந்த வரை பிரச்சினையில்லாமல் இருந்தார். பெரிய பட்ஜெட் படமென்றாலே இப்படித்தான்.

சங்கர் பாருங்கள் சொந்தமாக ரிலீஸ் செய்து கோடிகளைக் கொய்து கொண்டிருக்கிறார் இம்சை.

மா.கலை அரசன் said...

தயாரிப்பாளரின் நிலைதான் பாவம். உழைப்பு ஓரிடம் அறுவடை வேரிடமா?

Anonymous said...

I think Kamal-sir needs a superhit like this as he needs the Superstar Kamal for the creative KamalHasan to get finance!

I can not believe how a beautiful movie like "ANBE SIVAM" was rejected by the Tamil audience but lapped craps like Dhool/tirupachi etc.,!

I still think that Kamal-sir is pretty upset with our audience for the way they recieved my all time favorite classic HEY!RAM.

Hope he gets the financial backings for his next ventures to try out something like Anbe Sivam.

Anonymous said...

Gowtham Sir, thanks for clarifying. By the way, naan yezhuthalar alla. oru saadharana kanini employee dhaan. Andha kelvi kaettadhukku karanam - naan oru Kamal rasigan. Kamal padam odugiradhenral yenakku oru alpa sandhosham varum. avvalavudhan. Pavam sir 7th Channel Narayanan. I feel theatre owners should give him their excess profits. Why cant they do it? 'Baba' padam tholviyal Producer distributorukku panam kodukkavillaya? Andha maadhiri seyyalame!

Rajkumar, adhu 12 crore collection dhaan. profit illai. Idhil oru mukkiya pangu Overseas ilirundhu vandhirukkiradhu. In wikipedia, I saw that the total cost of VV is 24 crore. I dont know if thats exact. If the collections from just 4 days are 12 crore, I think by 50 days, it will fetch a very good profit.

Dev, indha kaalathil mudhal 10 naatkalil varum varumanam dhaan mukkiyam. Mudindha varayil, theatre owners mudhal varathil potta panathai sambadhithu vidgirargal. Naan VV Kasi theatreil paarthen. Saturday and Sunday, the movie was shown 6 shows a day to accomodate the crowd.

Maya, neengal solvadhu mutrilum unmai. Hey Ram, Anbe Sivam nalla padangal. Aanal avai irandum miga periya tholvigal. VV Aalavandhan polave sumaaraana padam. Yeppadi superhit agivittadhu yendru theriyavillai.

ரவி said...

ஆளவந்தான் எடுத்து போண்டியானார் ஒருவர்.

இந்த படத்தை எடுத்து போண்டியாகிறார் இவர்..

மொத்தத்தில் கமல் படம் நல்லா இருக்கும். கமல் படம் தயாரிப்பாளர் போண்டியாவார்..

Anonymous said...

http://www.indiaglitz.com/channels/tamil/article/24958.html

Dont worry Senthazal Ravi, this movie made lot of collection. Cinema is a industry where producers pay for people whom they think will succeed, if invested money on them. Kamal always maintained his BO position very well! When you try different things, you bound to loose money and as a producer, they better know that!

Anonymous said...

Haran,
If profit is an imagination, all those reports about the collection and 'Superhit' from magazines is a lie?! May be, Thirumangalam theatre is not the scale to jusdge this movie!

Maya said...

/VV is a decent masala and its way better than Tamil Filmdom nowdays./
தூக்கலான மசாலா என்று சொல்லுங்கள்.தயவு செய்து 'decent' என்று சொல்லாதீர்கள்.

/Kamalhaasan has been part of so many good movies which failed in BO and he needs a hit then and there to do good movies./
இதில்தான் கமலும் ரஜினியும் வேறு படிகிறார்கள்.ஒரு பாபா தோல்விக்குப் பிறகு ஒரு 'Hit' கொடுக்க வேண்டிய pressure ரஜினிக்கு உண்டு.கமலுக்கு அப்படி கிடையாது.கமல் கண்டிப்பாக வெற்றி தோல்வியைப் பற்றி ரஜினி அளவிற்கு பயப்படுவதில்லை.அப்படி பயப்படும் நடிகனாக இருந்தால் அவரால் ரிஸ்க் எடுக்க முடியாது.அதனால்தான் நமக்கும் குணா,அன்பே சிவம்,குருதிப் புனல்,Hey Ram போன்ற படங்கள் கிடைத்தன..ஏன் அவரின் 100 வது படமான ராஜபார்வை கூட தோல்விதான்..
எனவே Hit குடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒரு பொழுதும் கமலுக்கு இருந்ததில்லை..

/VV might not satisfy everybody but it satisfied his fans and money paying public./

நானும் ஒத்துக் கொள்கிறேன்.

/Kamal can't do Anbe sivams for elite people everytime and will take financial risk for the sake of taking it! /
ஒரு அபூர்வ சகோதரர்கள்,ஒரு தேவர் மகன் -எதிர் பார்ப்பது தவறா ??

/Go without much expectations, you will come back satisfied with VV!/

கண்டிப்பாக இல்லை நண்பரே..பார்த்ததில் ஏமாற்றமும்,எரிச்சலுமே மிஞ்சியது..

நன்றி

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

Anonymous said...

Ravi,

Alavandhan producer lost money for a different reason. As far as Alavandhan is concerned, not only the producer, but every one, including distributors and theatre owners lost money.

But VV seems to be a different issue. Everybody except the producer has gained money. Narayanan seems to have made a grave mistake by selling it for a lesser price. And theatre owners must be having a party now. I spoke to Kasi theatre owner. He said with the money he has made through VV, he can even produce 2 low-budget movies.

Haran solvadhil yenakku nambikkai illai. Thirunelveli matrum sila 'B' centregalil padam 'Superhit' illai yenraalum nanraagave odugiradhu. 3'aavadhu naal avar paarthen yendu solgirar. 3'vadhu naal Sunday. Sunday Ravi Krishna padam kooda fullaagathan odum.
Thirumangalam city aruge iruppadhaal(Anna nagar) adhai vida nanraaga odum.

Latest box-office report(Sep 1st):

http://www.indiaglitz.com/channels/tamil/article/24958.html

Anonymous said...

Haran,

I saw Dhool on the second day at Udhayam complex. It was matinee show and only 50% of the seats were occupied. Still we call it a Superhit rite? Indha kaalathil 'Ulagam Sutrum Vaaliban', 'Chinna thambi' padangalukku vandha maadhiri koottam varum endru yedhirpaarkka mudiyaadu. Andha padangal mothamaaga 10 theatregalil dhaan release agum. Aanal ippozhudhu ovvoru padamum 200 alladhu munnoooru theatregalil veliyidappadugiradhu.

Anonymous said...

Maya Avargalae,
Oru silarukku Thookalana Masala, oru silarukku Decent Masala. Why it is categorized as decent masala means, there is no separate comedy track and some of the usual formula things. Not only Kamal, every actor needs a hit then and there! Otherwise, they can't survive in the industry. Especially for an actor like kamal who experiments certain things, he needs commercial hits. Otherwise, he would not have dont 'Tenali' after Heyram. Take his career, he does a comedy or offbeat after one serious movie!

Anyway, you can't satisfy everybody with a movie. VV is pouring profits. See the following like http://www.behindwoods.com/tamil-movie-news/sep-06-01/02-09-06-kamal.html

ஜோ/Joe said...

கமலின் நடிப்பு செயற்கையாக இருக்கிறது என்று விமரிசனம் எழுதிய ஹரன் பிரசன்னாவுக்கும் மரை கழண்டு விட்டதாகத் தான் நான் நினைக்கிறேன்.