Monday, October 16, 2006

விளம்பரம்: குங்குமம் இந்த வாரம்..

குங்குமம் இந்த வாரம்!

சில்லுனு சினிமா, சிலுசிலுனு இலக்கியம்...
தீபாவளி சிறப்பிதழ் - இரண்டு புத்தகங்கள்

சில்லுனு சினிமா
 • ரஜினியும் நானும்! - வெற்றிப்பயணத்தை விவரிக்கிறார் ஷங்கர்
 • மணிரத்னம் அழைத்தால்கூட நடிக்க வரமாட்டீர்களா? - சானியாமிர்ஸா பிரத்தியேக பேட்டி
 • லவ் பண்ணுடா மகனே! - சிம்புவுக்கு விஜய டி.ஆர். காதல் டிப்ஸ்
 • நான் மிடில் க்ளாஸ் ஆளு - சிரஞ்சீவி பேசுகிறார்
 • ரயிலில் பிறந்த ஹீரோ - என்.சொக்கன் கட்டுரை
 • முன்னாபாய்-II - விமரிசனம்
 • இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அனுபவத் தொடர்
 • சிம்மாசனத்தை தொலைத்துவிட்டு அடையாளம் தேடும் திறமையான இசையமைப்பாளர் - ஒரு நிஜம்
 • 'முனி' கலகல கலாட்டா
 • புதுசா வருவான் போக்கிரி - இயக்குநர் பிரபுதேவா
 • தசாவதாரத்துக்காக கடலில் வீசப்பட்ட கமல்
 • ம்ணிரத்னத்தின் அடுத்த நாயகன்
 • இந்த தீபாவளிக்கு 7 வெடிகள் - சினிமா ஸ்பெஷல்
 • சிவப்பதிகாரம் ரவுண்ட் அப்
 • ரஜினி நம்மாளுய்யா - சாலமன் பாப்பையா
 • இளையராஜாவின் புதிய அவதாரம்
 • நிழல் ஹீரோவை நிஜத்தில் சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்
 • ஜெயம் ரவியின் தித்தீபாவளி

சிலுசிலுனு இலக்கியம்

 • முகம் பார்க்கலாம்.. - மதன் எழுதும் '!' தொடர்
 • படையெடுத்த கவிஞர்.. பதறிய தேசங்கள்
 • சுஜாதாவின் விடுபட்டுப்போன ஸ்ரிரங்கத்துக் கதை
 • நிறங்கள் - ராஜேஷ் குமார் சிறுகதை
 • ம்.செ. வின் தூரிகையில் அனுராதா ரமணன் சிறுகதை
 • கிரேஸி மோகனின் கிச்சு முச்சு
 • எஸ்.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை
 • பகீரதப் பிரயத்தனம் - சுகி சிவம்
 • அழகே அனார்கலி
 • மு.வ. பற்றி அவரது பேரன்
 • அழகிய பெரியவன் கட்டுரை
 • பரமசுகம் - சிறப்புச் சிறுகதை கி.ராஜநாராயணன்

இன்னும் இன்ன்ன்னும்.. இப்போது விற்பனையில்!

குங்குமம் - பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!

10 comments:

லக்கிலுக் said...

கலைஞரின் பாயும் புலி பண்டா வன்னியன் அல்லது தாய் - இந்த் இரண்டில் ஒன்றை மீண்டும் மறுபிரசுரம் செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.....

BadNewsIndia said...

கௌதம் சார்,

ரொம்ப நாளா உங்க கிட்ட கேக்கணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப கேக்கறேன்.

குங்குமம் என்ற powerful மீடையா கைல இருக்கே. அதுல ஏதாவது ஒரே ஒரு பக்கத்தை ஊருக்கு உதவர மாதிரி ஒதுக்கலாமே.

யாராவது ஊரை திறுத்தும் நல்லவங்களை பத்தியோ;
ஊர்ல நடக்கர கெட்டதை பத்தியோ;
சாலை சீர்கேடு; சுகாதார சீர்கேடு இதை மாதிரி ஏதாவது ஒண்ண highlight பண்ணி காட்டலாமே.

'deccan chronicle' பேப்பர்ல வற்ற 'who is ruining my city' மாதிரி போடலாமே.
குங்குமத்துல போட்டா பாமரனும் பாத்து படிச்சு திருந்துவானே.

சமீபத்தில் ஒரு பதிப்பு பார்த்தேன் - தொப்புள் தான் ரொம்பி இருந்தது புத்தகம் முழுதும்.
சாலையில் இருக்கும் மேடு பள்ளங்களையும் காட்டலாமே.

என்ன சொல்றீங்க? what say you?

Anonymous said...

இலவசம் என்னாது இதோட?

நெல்லை சிவா said...

நானும் 'bad News India', சொல்வதை வழிமொழிகிறேன், கொளதம்.

உங்களுக்கு மீடியாவில் பழக்கம் இருக்கிறது. நீங்கள் நினைத்தால், இந்த சமூகத்திற்கு மேலும் சில நல்ல விசயங்கள் செய்யலாம்.

மேலும் உங்கள் பார்வைக்கு: http://wewakeananda.blogspot.com/

Anonymous said...

Hello gowtham

Are u remember me? I'm Sudha ur collegemate in PSNA DGL.Now I'm in Sydney.Pls contact:

லக்கிலுக் said...

//Are u remember me? I'm Sudha ur collegemate in PSNA DGL.Now I'm in Sydney.Pls contact://

தடாலடியார் சாரே!

"ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" பாட்டு ஞாபகத்துக்கு வருதா? :-)

வெங்கட்ராமன் said...

/*************************************
குங்குமம் என்ற powerful மீடையா கைல இருக்கே. அதுல ஏதாவது ஒரே ஒரு பக்கத்தை ஊருக்கு உதவர மாதிரி ஒதுக்கலாமே.
*************************************/

என்ன என்ன இதெல்லாம்,

நமீதா படத்த வள வளன்னு போட சொன்னா போடுவாங்க. இந்த மாதிரியெல்லாம் போடுவாங்களா.

ஊர்ல இருக்கிறவங்கள்ளாம் திருந்த ஆரம்பிச்சுட்டா, இவங்க குடுமபத்துக்கு வேலை இல்லையே. . . . ?

லக்கிலுக் said...

//ஊர்ல இருக்கிறவங்கள்ளாம் திருந்த ஆரம்பிச்சுட்டா, இவங்க குடுமபத்துக்கு வேலை இல்லையே. . . . ?//

ஆமா. இவரு திருந்திட்டாரு. ஊருலே இருக்கறவங்களாம் திருந்தவேயில்லை.

ஆண்டோ பீட்டர் தொடரை படிக்குறதை விட்டுட்டு எதுக்கு சார் நமீதா படத்தையெல்லாம் பாத்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கீங்க?

உருப்படியானதை விட்டுட்டு உருப்படாததை கட்டிக்கிட்டு அழறதே உங்களுக்கெல்லாம் வேலையாப் போச்சி.....

வெங்கட்ராமன் said...

/***********************************
ஆமா. இவரு திருந்திட்டாரு. ஊருலே இருக்கறவங்களாம் திருந்தவேயில்லை.
***********************************/

நான் திருந்தி விட்டேன், குங்குமம் ஆனந்த விகடன் .... கண்றாவியெல்லாம் படிக்கறதில்ல. . . .

ஊரத் திருத்தனும்னு நானா சொன்னேன். . .

/**********************
யாராவது ஊரை திறுத்தும் நல்லவங்களை பத்தியோ; . . . . .
***********************/
அப்படீன்னு நானா சொன்னேன் . . ?

வெங்கட்ராமன் said...

/******************************
உருப்படியானதை விட்டுட்டு உருப்படாததை கட்டிக்கிட்டு அழறதே உங்களுக்கெல்லாம் வேலையாப் போச்சி.....
******************************/

தெருவுல சாக்கடை உடைப்பெடுத்து ஒடுனா. . .

ஓரமா தான ஓடுதுன்னு சும்மாவா இருப்போம்.