
கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போய் வருபவர்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் விடுமுறை.
சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் வீட்டுக்குத் திரும்பும்போதே கணவனுக்கு காதல் மூடு வந்துவிடும். மனைவிக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கிக்கொண்டு வருவான். “சினிமாவுக்குப் போலாம்” என்பாள் அவள்.
வேண்டாவெறுப்புடன் வெளியே கூட்டிப்போவான். வேண்டுமென்றே சண்டையும் போடுவான். “விஜய் படம் போலாம்” என அவள் சொன்னால், “அஜித் படம் போலாம்” என அவன் சொல்வான். வாதங்களில் அவனே ஜெயிப்பான்.
விதண்டாவாதங்களுக்கான காரணம் ‘இரவு’ விவகாரம். சினிமா பார்த்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இரவு பத்து மணிக்குமேல் அலுப்போடு வீட்டுக்குள் நுழைவார்கள் இருவரும். ‘நான்ஸ்டாப் கொண்டாட்டம்’ நடத்தும் நோக்கத்தோடு மனைவி மீது அவன் பாய.. “ஸாரிங்க, ரொம்ப டயர்டா இருக்கு. இன்னிக்கு வேணாம்” என அவள் திரும்பிப் படுத்து விடுவாள்.
‘ம்ஹூம் இந்த சனிக்கிழமை ஏமாந்துபோகக் கூடாது!’
ஒரு முடிவோடு வீட்டுக்குள் நுழைந்தான் கணவன். வழக்கம் போலவே மனைவி கேட்டாள்.. “ஏங்க சினிமாவுக்குப் போலாமா?”
“வேண்டாம்”
அவ்வளவுதான்! சண்டை பிடித்து விட்டாள் மனைவி. சில நிமிடங்கள் ஆனதும் திட்டமிட்டபடியே தோற்றுப் போனான் அவன். இருவரும் சினிமாவுக்குக் கிளம்பினார்கள்.
வழியில் ஓடும் பைக்கிலேயே அடுத்த சண்டை! ‘த்ரிஷா படம் போலாமா - அஸின் படம் போலாமா?’
இந்த சண்டையிலும் திட்டமிட்டபடியே அவனே தோற்றான். அவள் இஷ்டப்படி அஸின் படத்துக்கே போனார்கள்.
தியேட்டர், ஹோட்டல் எல்லாம் முடித்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டான் அவன். தன்னிடம் இரண்டு முறை தோற்றுப்போனதுதான் அதற்குக் காரணம் என்று அவளுக்கும் தெரிந்தது!
அப்புறம் என்னாகி இருக்கும்?
?
?
?
?
?
?
?
வேறென்ன, அவன் எதிர்பார்த்த மாதிரியே அவன் ஜெயித்தான். இனிக்கும் இரவுதான்! இதைத்தான் சின்ன மீனை இழந்து விலாங்கு மீனைப் பிடிக்கும் டெக்னிக் என்பார்கள்!!
முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' கள் இங்கே!
9 comments:
"அனுபவம் / நிகழ்வுகள்" பகுதியில் வருதுங்கோவ்....
:))))))))))))))))))))
பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் இப்படி ச்சின்னச்சின்னக் கதையில் சொல்லிடறீங்க நல்லா இருக்கு...
என்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு யூஸ்புல் டிப்ஸ்!!!
தோற்றாலும் ஜெயித்தாலும் வெல்வது என்னமோ நிலாதான். ஒன்று நிலா காயும், இல்லை அமாவாசையாகும்.
அம்மாவாசை முடிஞ்சு நிலா வளர்ந்து முழுசா காயும் போது (சனி இரவு) அந்த அழகே அழகு தான்.(தாஜா பண்ணும் அழகு).
படிக்க ரசமாக உள்ளது.
அம்மாவாசை முடிஞ்சு நிலா வளர்ந்து முழுசா காயும் போது (சனி இரவு) அந்த அழகே அழகு தான்.(தாஜா பண்ணும் அழகு).
படிக்க ரசமாக உள்ளது.
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்பார்கள்... அது இது தானோ?
Ha Ha Ha...
Good One..
இது கிட்டதட்ட நம்ம தங்கமணிகிட்டயும்
workout ஆகியிருக்கிறது
Post a Comment