வணக்கம் வலைமக்களே! புதுசா ஒரு
ஜி போஸ்ட் ( நியூ) ஆரம்பிச்சுருக்கேன்ல, அதன் நினைவுபடுத்தலா இந்த வார தடாலடி போட்டி! ஹி..ஹி!
நியூஸ் பேப்பர் படிச்சுட்டு இருக்குறது நம்ம ஊரு கோயிந்துன்னு நினைச்சுக்கங்க! அப்படி என்ன நியூஸ் படிச்சுட்டு இந்த அதிர்ச்சி காட்டுறாரு மனுஷன்?!இதான் போட்டி, நிஜமோ கற்பனையோ புகுந்து வெள்ளாடுங்க..மற்ற விவரங்கள் வழ்க்கம்போல்தான். போட்டியில் கலந்துகொள்வதற்கான கெடு நேரம்: 27.11.2006 திங்கள் மாலை 6மணி (இந்திய நேரப்படி).
105 comments:
அடப்பாவி, பின்னூட்டம் போடுகிறவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுன்னு முழுப்பக்க விளம்பரமே போட்டிருக்கானே !
:)
Comments அனுப்பும்போதே உடன் உங்கள் ஊரையும் (or Country) குறிப்பிடவும். அதாவது உதாரணத்துக்கு.. 'பெங்களூரில் இருந்து இளா'
நன்றி
வருத்தமில்லா வாலிபர் சங்கத்தில் சேருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு முத்தம் வழங்க நமீதா முன்வந்திருக்கிறார்!!!
ஆஹா... கெளம்பிட்டானுங்கய்யா... கெளம்பிட்டானுங்க....
நேத்து எம் பொண்டாட்டி என்னை பூரிக்கட்டையால அடிச்சதை கூட ஹெட்லைன் நியூஸா போட்டுட்டானுங்களா?
இவனுங்களுக்கு படம் வேற எப்படி கெடைச்சது?
என்னாது? மீரா ஜாஸ்மினுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் கல்யாணமா?
யாரை கேட்டு பண்ணிக்கிறாங்க?
மறுபடியும் வலைபதிவர் சந்திப்பு நடத்தப் போறாங்களாமா?
கிழிஞ்சது கிருஷ்ணகிரி....
அட கடவுளே இன்னிக்கு ஞாயித்துகிழமையா அது தெரியாம நேரத்துல எழுந்திரிச்சுட்டனே :(
பத்திரிக்கை ஆசிரியர் கோயிந்து
"அடக் கடவுளே.... தமிழ் தெரியாத ஒரு ஜடத்த கம்போஸ் பண்ண சொன்னது தப்பா போச்சே, பாரு எப்படி கம்போஸ் பண்ணி இருக்கான்"
//...Thamizh theriyatha jadathil...//
கேரளா - தமிழ்நாடு பெரியாறு அணை குறித்து பேச்சுவார்த்தை...
கர்னாடகா - தமிழ்நாடு காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை...
கிருஷ்ணா நீரை உடனே அனுப்பவேண்டும் - தமிழ்நாடு கோரிக்கை...
- 10 வருஷமா இந்த நியூஸ்களையே திரும்ப திரும்ப படிக்கிற மாதிரி இருக்கே...
என்னாது செல்வி ஜெயலலிதா அமெரிக்க கவர்னர் ஆகிட்டாங்களா?..
அல்லது
என்னாது கலைஞர் கருணாநிதி அமெரிக்க கவர்னர் ஆகிட்டாங்களா?..
சரக்கு ரயில் தடம் புரண்டதா?
பின்னே "சரக்க" ஏத்துனா போதையில தடம்புரள தான் செய்யும்....
இன்று பாராளுமன்றம் அமைதியாக நடந்தது....
உலகப் பொருளாதாரச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் இனிமேல் திருப்பதியில் லட்டுக்கு பதிலாக "போண்டா" வழங்கப்படும்.
வீராச்சாமியில் டி.ராஜேந்தர் - மும்தாஜ் டூயட்!
கோவிந்தா! சரிதான் ! இன்னிக்கு ஸ்டாக் மார்கெட் கோவிந்தா !
இன்னிக்கு ஞாயிறா! அடப்பாவி! இவ்வளவு சீக்கிரமா எழுந்திட்டனே! இப்ப மறுபடியும் முதலேயிருந்து தூங்கனுமா?
சென்னையயலிருந்து தமிழி.
ஏண்டி, குழம்பு நல்லாட்டி சொல்ல வேண்டியது தானே!
கணவன் வன்கொடுமை-ன்னு புகார் தர அளவுக்கா இருந்துச்சு!
பேப்பர்லே வேற போட்டுடான்னே!
இனி எப்படி நான் மார்க்கெட் போவேன் ??
-சென்னையிலிருந்து தமிழி.
அடப்பாவிகளா?! இன்னொரு வலைபதிவாளர்கள் சந்திப்பா?. இதுக்கு பேப்பர் ல வேற விளம்பரமா? இட்லி வடையார் இனி "சட்னி" தான்!
--ஐசக் ராஜா --> சென்னை
Indhira Gandhi Sethupoitangala!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Ada PAveegala........Pazhiya Paper padpeenga theriyum....Ithukuna Evaloo Pazhiya paper lama Padipeenga..??
"என்னது மகாத்மா காந்தி சுடப்பட்டாரா?
டேய்! பேப்பருக்கு காசு தரலைன்னா..இப்படியாடா!
பழைய பேப்பர் போட்டு படுத்தறது?"
-சென்னையிலிருந்து தமிழி.
என்னது, பர்வேஸ் முஷரப் பாக்கிஸ்தான் கிரிக்கெட் டீம் கேப்டனாயிட்டாரா ?
அனுப்பியது ரவி,பெங்களூர்
என்னது !!!!!!!! வீரப்பன் உயிரோட இருக்கானா ??
என்னது ? பிஜி தீவுக்கு என்னை பிரதமரா நியமிச்சிருக்கானுங்களா ??
என்னாது ??? பல்விளக்கறவங்கல்லாம் பயங்கரவாதிங்கன்னு பாக்கிஸ்தான் அரசாங்கம் அறிவிச்சிருச்சா ??
என்னது ?? முஷரப் பேரனை நாய் கடிச்சதுக்கு இந்தியாதான் காரணமா ?
என்னது ? நயன்தாராவும் சிம்புவும் மறுபடி சேர்ந்துட்டாங்களா ??
பக்கத்து வீட்டில் ஓசி பேப்பர் வாங்கிப் படித்தவர் வெட்டிக் கொலையா?!
- (மயிலாடுதுறையிலிருந்து) மாயவரத்தான்...
அடங்கொக்காமக்கா.. நாளையில இருந்து பேப்பர் ரெண்டு ரூபா ஆகிடுதா?!
கேரளாவும், கர்நாடகாவும் மனசு மாறிட்டாங்களா(ம்)?!
ஐஸ்வர்யாராயுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் கல்யாணம் ஆனது கன்பார்ம் ஆகிடுச்சா?!
இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றும்னு ஜோசியம் சொல்லியிருக்காங்களா?!
என்னது.. பக்கத்து வீட்டுக்காரன் கல்யாணத்திலேயும் வரதட்சணை எதுவும் வாங்கலைன்னு அரசு ஊழியர்கள் உத்தரவாதம் தரணுமாமா?!
என்னது..? இனிமே ஜி போஸ்ட்டிலே ஜெயிக்கிறவங்க பேரெல்லாம் குங்குமத்திலே போட மாட்டங்களாமா?!
ஜெ.வும் தி.மு.க.வுக்கு தாவிட்டாங்களா?!
தமிழக இ.காங்கிரஸ் தலைவர்கள் ஒட்டு மொத்தமா சேர்ந்து நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்காங்களா?!
என்னது....'மட்டன் குனியா'ன்னு புது வியாதி பரவுதாமா?!
'ஒன்னோட கொறட்டை சத்தம் தாங்க முடியலை.. அதனால தான் ஓடிப் போயிட்டேன்'னு கோயிந்தோட பொண்டாட்டியோட விளம்பரம் பேப்பரிலே!
என்னது.. சிவாஜி படத்தோட திருட்டு வி.சி.டி. இண்டர்நெட்டிலே கிடைக்குதா?!
ஐயையோ! என் காணமல் போன மனைவி "எங்கிருந்தாலும் தொடர்பு கொள்க!" ன்னு முதல்பக்கத்திலேயே விளம்பரம் கொடுத்திருக்காளே!
கோவிந்தா! பிச்சுக்கோ!?
சென்னையிலிருந்து தமிழி.
என்னாது!! மனைவியை அடித்தால் 2 வருசமா!
நல்ல வேளை நேத்து அவள் மேல உட்க்கார்ந்த கொசுவ அடிச்சத யாரும் பாக்கல!!?
சென்னையிலிருந்து தமிழி.
தலைதீபாவளிக்கு வந்தவன் தான்! வந்து நாலு வருசம் தானே ஆச்சு!
அதுக்காக முதல் பக்கத்திலேயே
காணமல் போனவர் அறிவிப்பில் என் பேரைப் போட்டு, என் அப்பா அட்ரஸை தந்திட்டானே! என் மாமன்!
சென்னையிலிருந்து தமிழி.
தமிழ்ல பதிவு போட்டது பத்தாதுன்னு இங்கிலீஷ்ல வேற கெளதம் பதிவு ஆரம்பிச்சு இருக்காராம். அடக்கடவுளே
'பெங்களூரில் இருந்து இளா'
//வருத்தமில்லா வாலிபர் சங்கத்தில் சேருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு முத்தம் வழங்க நமீதா முன்வந்திருக்கிறார்!!! //
சேராதவர்களுக்கு -- பின்னாடி போயிருவாரா?
எவனோ நான் செத்துபோயிட்டேன்னு விளம்பரம் குடுத்துருக்கான்.
'பெங்களூரில் இருந்து இளா'
//Comments அனுப்பும்போதே உடன் உங்கள் ஊரையும் (or Country) குறிப்பிடவும். அதாவது உதாரணத்துக்கு.. 'பெங்களூரில் இருந்து இளா'
நன்றி //
என்னாது 'சொர்கத்துல இருந்து இளா'வா?
ப்ரெளன் சுகர் வைத்திருந்த வாலிபர் கைதா???
ஐய்யையோ! நேத்து தான் ! டாக்டர்! எனக்கு சுகர் இருக்குன்னு சொன்னாரே!
-சென்னையிலிருந்து தமிழி.
அடப்பாவிகளா.. தமிழ் பேப்பர் படிக்கிறதே இங்கே தகராறு. 'பேப்பர் போடுங்கடா'ன்னு சொல்லிட்டு வந்தா இங்கிலீஷ் பேப்பரை போட்டு தொலச்சிருக்கானுங்களே.
'விரைவில் தொடங்க இருக்கும் பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு தவிக்க இளிச்சவாயர்கள் தேவை' - அடப்பாவிகளா, இப்படியெல்லாம் கூடவா விளம்பரம் தருவாய்ங்க?!
அடப்பாவிகளா.. 'லோக்கல் நியூசை அதிகமா தர்ற பேப்பர்'னு விளம்பரவம் தந்தானேன்னு வாங்கி பாத்தா, நம்ம வீட்டுல நேத்து நடந்த சண்டையை கூட போட்டோ எடுத்து போட்டு தொலச்சிருக்கானே.
அடப்பாவிகளா!பின்னூட்டந்தான்
Thaminglish லே போட்டீங்கன்னா, இப்ப
முழுபேப்பரும் Thaminglish லே
போட ஆரம்பிச்சிட்டானுவளே!
அடப்பாவிகளா!இ-கலப்பை புடிபடாமதான் Thaminglish லே பின்னூட்டம் போட்டேன்; இப்ப எடிட்டரே எல்லாத்தையும் Thaminglish லே போட்ருக்காறே?
என்னாது?
பொண்டாட்டிய அடிச்சாலும் ஜெயிலு;
புள்ளய அடிச்சாலும் ஜெயிலா?
நான் எப்ப 'சீரியல்'லே நடிச்சேன்?
என் போட்டோ 'ஆட்'லே வந்திருக்கே..
பூரி, மசலாவக் கேட்டால் தெரியுமோ?
அய்யோ! மிஸ் பண்ணிட்டேனே!
" தமிழ் ப்ளாக் நடத்துபவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் அளிக்கப்படும்!"
திமுக தேர்தல் வாக்குறுதி!
- தினகரன் - 02 மார்ச் 2011
சென்னையிலிருந்து இ.சி.ஆர்
"தமிழ்மணத்தில் "எப்படி" பதிவுகளுக்குத் தடை!"
"தி.மு.க-அ.தி.மு.க இணைப்பு!
சுப்ரமணியசாமி முயற்சி வெற்றி!
தடாலடிப் போட்டிகளுக்குத்தடை!
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
சிவஞானம்ஜி/ சென்னை
Dondu-Doondu santhippu!
Luckylook ERpaadu!!
Baalabarathy aRivippu!!!
koottai vittuttaanuvaLee..
namma pEpparlE
pOttOvumillE...niyuம் varallIYe..
பாவி ப்ரூப் ரீடர், 'வை.கோ' சீறினார்-னு போடறதுக்கு பதிலா, "சை.கோ" சீறினார் -னு போட்டுத் தொலைச்சிட்டானே!
சென்னையிலிருந்து ஜெய.சந்திரசேகரன்
"டோண்டு-டூண்டு சந்திப்பு!
லக்கிலுக் ஏற்பாடு!!
பாலபாரதி அறிவிப்பு!!!"
கோட்டை விட்டுட்டானுவளே
நம்ம பேப்பர்லே நியுஸே இல்லியே?
(ஒரு எடிட்டர் போட்டிப் பத்திரிகையைப் படிக்கின்றார்...)
சரியாப் போச்சுடா! "பெரியார் அணைக்குத் தடை" - கேரள அரசுன்னு போடறதுக்கு பதிலா, "பெரியார் அணைக்கத் தடை"- இப்படி போட்டானே; பெரியார் சினிமாக் காரங்க, ஆதரவாளர்கள், சவுண்டக் குடுக்கப் போறாங்க!
சென்னையிலிருந்து ஜெய.சந்திரசேகரன்
அடப்பாவி! இந்த ப்ரூப் ரீடரை மிதிக்கணும்!
'தன்மானமிக்க தலைவர் ' அப்படின்னு போடச்சொன்னால், 'சன்மானமிக்க தலைவர்' ன்னு போட்டுட்டானே!
சென்னையிலிருந்து தமிழி.
ஸ்பான்சர் கொடுமை தாங்கலடா சாமி!முதல் பக்கம் முழுக்க இப்பவே பொங்கலுக்கு சேலை விளம்பரமாஆஆஆஆ!
சென்னையிலிருந்து ஜெய.சந்திரசேகரன்
என்னாது!! அடிவாங்க ஆட்கள் தேவையா!
ஏண்டா! இப்படி எல்லாம் தலைப்புச் செய்தி கொடுத்தெல்லாமாடா என்னத் தேடுவீங்க!?
ரைட்ரா! இன்னிக்கு சங்கத்தை கலைச்சர வேண்டியதுதான்.
சென்னையிலிருந்து தமிழி.
சென்னையில் காவேரி!
அடப்பாவிகளா! நடிகை காவேரி ன்னு போடக்கூடாதா! ஒரு நிமிசம் சந்தோச அதிர்ச்சியா போச்சே!
-சென்னையிலிருந்து தமிழி.
'டாலர் மதிப்பு வீழ்ச்சி!
நாணய மாற்றுவீதம்,$1=ரூ.1 ஆனது.
யூரோ கரன்சி மூழ்கும் அபாயம்!'
'பின் லேடனுக்கு புஷ் டீ பார்ட்டி!
சுப்ரமண்யஸ்வாமி ஏற்பாடு!'
சிவஞானம்ஜி/சென்னை-4
சிவாஜியிலே தலைவரோட வருமானம் எவ்வளவுன்னு போட்டிருக்கான்ப்பா!
'தமிழகம் விற்பனைக்கு' முழுப்பக்க விளம்பரம்....ஆ...!
என்னது, சீனாதுமில்லே, இந்தியாதுமில்லே, "அருணாசல''ப்ரதேசம், தலைவர் ரஜினியினுடையதா?
புஷ் எதிர்ப்பாளர்கள் சுமார் 1 மில்லியன் மக்கள், ஒரே நாளில், ஒரே நேரத்தில், இராக் எண்ணெய் கிணறுகளில் குதித்துத் தற்கொலை!
சென்னையிலிருந்து ஜெய.சந்திரசேகரன்
சிம்புவுக்கும் அவரோட அடுத்த படத்து நாயகிக்கும் காதலாம்
மாடு வளர்ப்பவர்களுக்கு ரயிலில் 50 சதம் தள்ளுபடி - லாலு அறிவிப்பு
தடாலடியாருக்கு ஒரு சின்ன ஆலோசனை.
பெயருடன் அவர் ப்ளாக் பேரும் உங்கள் பத்திரிக்கையில் பிரசூரித்தால் தமிழ் ப்ளாக் பற்றி பலருக்கு தெரிய ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்...
இதை பற்றியும் நீங்கள்ள் கொஞ்சம் சிந்திக்கலாமே!!!
//பெயருடன் அவர் ப்ளாக் பேரும் உங்கள் பத்திரிக்கையில் பிரசூரித்தால் தமிழ் ப்ளாக் பற்றி பலருக்கு தெரிய ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்...//
வேண்டாமென்று நினைக்கிறேன்.
வலையுலகில் வலம்வரும் குங்குமம் வாசகர்கள் என்றே குறிப்பிடுகிறீர்கள். அதுவே போதுமானது. ஒவ்வொருவரின் வலைப்பூ முகவரியும் அவசியமற்றது. சாதாரண விளிம்புநிலை வாசகனுக்கு அது தேவை இல்லாததும் கூட.
பத்திரிகைகளை கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் வாசகன் disappointment ஆக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இண்டர்நெட் மூலம் அனுப்பப்படும் கடிதங்களோ கமெண்டுகளோ மட்டுமே பிரசுரமாகும் என அவன் நினைக்கக்கூடும். அவனது பங்களிப்பு குறைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் வாசகனுக்கு வந்துவிடக்கூடாது.
முன்னாடி சொன்னது போட்டிக்கில்ல...
இதோ என்னுடைய கமெண்ட்...
என்ன தண்ணி அடிச்சிட்டு நேத்து நைட்டு நம்ம போட்ட ஆட்டத்தை பேப்பர்ல போட்டுட்டானுங்களா???
http://www.funehumor.com/images/fun/bushsadm.jpg
"இதைத்தான் தண்டனைன்னு சொன்னாய்ங்களா! அடப்பாவிகளா!"
பின் குறிப்பு: படத்தை பார்த்துவிட்டு கமெண்டைப்படிக்கவும்.
[போட்டிக்கு அல்ல]
(கெளதம்ஜி. இது போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுமா! இல்லை வெறும் கமெண்ட்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுமா?? )
(கெளதம்ஜி. இதற்கு முன் அனுப்பியது போன்ற படத்துடன் கூடிய கமெண்ட்கள் இப்போட்டிக்குத் தகும் என்பது என்கருத்து!
போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுமா! இல்லை வெறும் கமெண்ட்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுமா?? )
Thamizhi,
நடத்துங்கள், இன்று மாலை 3 மணிக்குத்தான் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு கொண்டு போகப்படும். அதுவரை வரும் கமெண்ட்டுகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறேன், போதுமா!
நன்றி. கெளதம்ஜி..
என்னது கம்பெனிய மூடிட்டானுங்களா?
அடப்பாவிகளா... நேத்து நைட் வரைக்கும் இத பத்தி மூச்சையே விடலையேடா???
என்ன மனைவியோட செல்போன்ல பேசினாலும் குற்றம்னு சட்டம் இயற்றப்போறாங்களா..? என்ன கர்மம்டா இது?
என்ன மனைவியோட செல்போன்ல பேசினாலும் குற்றம்னு சட்டம் இயற்றப்போறாங்களா..? என்ன கர்மம்டா இது?
- நெல்லையிலிருந்து ரசிகவ்
என்னது? எதிர்காலச் செய்திகளா?
2016 தேர்தல் முடிவுகள் பேப்பர்ல போட்டிருக்கானே?
ஆ!!!
அடுத்த ஜனாதிபதி நானா?
"'நடிகை கோமளப்ரியா தன் கணவர் கோவிந்துவை விவாகரத்து செய்தார்'
அடப்பாவி எங்கிட்ட கூட சொல்லலியே! அதுக்குள்ள பேப்பர்ல பேட்டி கொடுத்திட்டியா?"
'தீவிரவாதத்தை எதிர்ப்பேன்- பின் லேடன்!
எதேச்சாதிகாரத்தை எதிர்த்து புஷ்
பிரகடனம்!
காஷ்மீர் இந்திய மாநிலம்தான்- முஷ்ரப் ஒப்புதல்!
எண்ணெய் விலை வீழ்ச்சி-வளைகுடாநாடுகள் அறிவிப்பு!
இந்தியச்சந்தையில் ஆபரணத்தங்கத்தின் விலை சரிவு!'
ஏப்ரல் 1 ங்கிறதுக்காக இப்படியெல்லாமா ந்யூஸ் போட்றது!
என்னது...!!! காந்தி தாத்தாவ சுட்டுட்டாங்களா......?
என்னது...!!! காந்தி தாத்தாவ சுட்டுட்டாங்களா......?
கெளதம் முதலில் அறிவித்தார்:
போட்டிக்கான கெடு 27/11/06 திங்கள்
மாலை 6 மணி.
அவரே பிறகு அறிவித்தார்:...ஆசிரியர் குழுவின் பார்வைக்கு 3 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.
என்னாது..? ஜெயேந்திரர் பல் வெளக்கிட்டாரா..?
கெளதம் ஐயா!
என்னாச்சு!
போட்டி முடிந்ததா! இன்னும் இருக்கா!
அறிவிப்புகள் என்னாயிற்று,
போட்டி முடிவுகள்...
முதல் பரிசு இருவருக்கே இந்த முறையும்.
1.மாயவரத்தான்
2.ஜெய.சந்திரசேகரன்
ஸ்பெஷல் பரிசு
வேறு யாருக்கு 'லக்கிலுக்'குக்கே!
முதல்'வர்களுக்கான பரிசு குங்குமத்தில் இருந்து வீடு தேடி வரும்!
ஸ்பெஷல் பரிசாக லக்கிலுக் அவர்களுக்கு அவர் விரும்பிய சி.பா.ஆதித்தனாரின் 'இதழாளர் கையேடு'
ஆறுதல் பரிசாக குங்குமத்தில் பிரசுரிக்கப்படும் கமெண்ட்டுக்காரர்ரள்..
தமிழி, சிவஞானம்ஜி, இளா, வெட்டிப்பயல்.
கலந்து கொண்டவர்களுக்கும் வென்றவர்களுக்கும் உற்சாகப்படுத்தியவர்களுக்கும் நன்றி
//ஸ்பெஷல் பரிசாக லக்கிலுக் அவர்களுக்கு அவர் விரும்பிய சி.பா.ஆதித்தனாரின் 'இதழாளர் கையேடு'//
நன்றி தடாலடியாரே
இதுவரை நான் பெற்ற பரிசுகளிலேயே விலைமதிக்கமுடியாத பரிசு இதுவாகத்தான் இருக்கும்.
இந்தப் பரிசு நிச்சயம் என்னை கவுரவப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.
நன்றி! நன்றி!! நன்றி!!!
மிக்க நன்றி தடாலடியாரே...
அந்த கமெண்டுக்கு
பாஸ்டனிலிருந்து பாலாஜினு சேர்த்துக்கோங்க!!!
முதல்,ஸ்பெஷல்,ஆறுதல் பரிசுபெற்ற
அனைவருக்கும் வாழ்த்துகள்!
நன்றி கெளதம்.ஜி அவர்களே!
//
பத்திரிகைகளை கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் வாசகன் disappointment ஆக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இண்டர்நெட் மூலம் அனுப்பப்படும் கடிதங்களோ கமெண்டுகளோ மட்டுமே பிரசுரமாகும் என அவன் நினைக்கக்கூடும். அவனது பங்களிப்பு குறைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் வாசகனுக்கு வந்துவிடக்கூடாது.//
லக்கி,
நீங்க சொல்றதும் நியாயம்தான்...
நான் அவுங்க Point of Viewல இருந்து பார்க்கல...
கெளதம், முதல் பரிசு பெற்றவரில் நானும் ஒருவனா? நன்றி, குங்குமம் ஆசிரியர், மற்றும் குழுவினர்களே!
வணக்கத்துடன்
ஜெய.சந்திரசேகரன்
//லக்கி,
நீங்க சொல்றதும் நியாயம்தான்...
நான் அவுங்க Point of Viewல இருந்து பார்க்கல...//
ஒரு காலத்தில் பத்திரிகைகளுக்கு கடிதங்களாக எழுதி அவை வெளியிடப்படாததால் வெறுப்படைந்தவர்களுள் ஒருவன் நான் :-))))))
First Prize-aa?! WoW
பரிசு பெற்ற கமெண்ட்டுகள் எது எது என்று கொஞ்சம் சொல்லுங்களேன். (இதுக்குதான் எக்கச்சக்க கமெண்ட் கொடுக்கக் கூடாதுன்றது!)
Post a Comment