Thursday, December 07, 2006

இன்று இப்படம் கடேசி! / ததடாடாலலடிடி!


சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாள்.. சிறிது தயக்கத்துடன் என்னிடம் பேசினார் ஒரு வலைப்பதிவர்!

“ஒரு விஷயம் சொல்றேன்.. தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க நடத்துற தடாலடி போட்டிகள்ல லக்கிலுக்குக்கே பெரும்பாலும் பரிசு கொடுக்கறீங்க. குங்குமத்தில் பிரசுரம் செய்யும் ஆறுதல் பரிசுக்குரிய கமெண்ட்டுகளிலும் அவரோட கமெண்ட்டுகளே அதிகமாக இடம்பெறுகின்றன. அதுக்குப் பதிலா வேற சில பதிவாளர்களின் கமெண்ட்டுகளை பிரசுரிக்கலாமே? நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்தது போலிருக்குமே! சமீபத்தில் அறிவிக்கப்படாத ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் இது குறித்து பலர் வருத்தப்பட்டாங்க” என்றார் அந்த நண்பர்.

அவருக்கு நான் சொன்ன பதிலைச் சொல்வதற்கு முன் எனக்கு வந்த இன்னும் சில மின்னஞ்சல்கள் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

அடுத்த நாளே எனக்கு வந்த ஒரு தனி மடலில் இருந்ததும் சற்றேறக்குறைய இதே விஷயம்தான்! ஆனால் லக்கிலுக்கின் பெயருக்குப் பதில் இங்கே இருந்தது மாயவரத்தான் பெயர்!!

அடுத்ததாக வந்த ஒரு மொபைல் அழைப்பு, ‘லக்கிலுக், சிவஞானம்ஜி, தமிழி, சிந்தாநதி’ என்றது. அடுத்துவந்த மெயில், ‘மாயவரத்தான், வீ த பீப்பிள்’ என்றது.

இப்போ என் பதில்..

தடாலடிப் போட்டிக்கு வரும் பின்னூட்டங்களில் எழுதியவர்களின் பெயரையெல்லாம் நீக்கிவிட்டுத்தான் பரிசீலணைக்கே எடுத்துப் போவேன். சராசரியாக ஐந்து பேர் மதிப்பிடுவார்கள். அதாவது தாங்கள் செலக்ட் செய்யும் கமெண்ட்டுகளுக்கு டிக் கொடுப்பார்கள்.

அதிகதிகப்படியான டிக் வாங்கும் கமெண்ட்டுகளுக்கு முதல் பரிசு(கள்) முடிவு செய்யப்படும். எவ்வளவுக்கெவ்வளவு டிக் குறைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இறங்குவரிசையில் ஆறுதல் பரிசு, அதாவது பிரசுரத்துக்கு மட்டும்!

இப்படி டிக் வாங்கி தேர்வாகும் லக்கிலுக்/ மாயவரத்தான் கமெண்ட்டுகளை நான் தூக்கிக்கடாசுவது எந்த விதத்தில் நியாயம்?

முதல் பரிசு வாங்கிவிட்டார் என்பதால் ஆறுதல் பரிசுக்காக டிக் மதிப்பீட்டில் தேறிவரும் இவர்களது கமெண்ட்டுகளை ஒதுக்குவதும் நியாயமே அல்ல! நான் வளர்ந்த விகடன் எனக்குக் கற்றுக்கொடுத்ததும் இதைத்தான். அதாவது விகடன் நடத்தும் போட்டிகளில் பாருங்கள், முதல் பரிசு வாங்கிவிட்டார் என்பதற்காக ஒருவரது ஆறுதல் பரிசுகளை (இரண்டு, மூன்றாம் பரிசுகளையும்கூட) நிராகரிப்பதில்லை எப்போதுமே!

ஆக, திரும்பத்திரும்ப வெற்றி பெறும் நபர்களிடம் ‘இனிமேல் நீங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது. அப்போதுதான் மற்றவர்கள் பரிசு வாங்க முடியும்’ என நான் எப்படிச் சொல்லமுடியும்? அது சொத்தையான கோரிக்கையல்லவா! தவிர, ஐம்பதுக்கு குறைவான பங்களிப்புகள் என்று தடாலடிப்போட்டிக்கு வருகிறதோ அன்றுதான் அதை நிறுத்திக்கொள்ளலாம் என்பதே என் (முன்னாள்) முடிவு. இந்த நண்பர்களே ஐம்பதுக்கும் குறையாமல் தொடர்ந்து போட்டி நடக்கக் காரணமாயிருந்தவர்கள்!

மற்ற பதிவர் யாரேனும் ஒரு ஆலோசனையாக அதுவும் நேரிடையான பின்னூட்டம் வழியாகச் சொல்வதே சரியானதாகும். அப்போதும்கூட தொடர் வெற்றிபெறும் அவர்களின் திறமையை மனமாரப் பாராட்டிவிட்டுத்தான் இதைச் யோசனையாக முன்வைக்க வேண்டும்.

ரோஜாக்களுடன்தான் முள்ளும் இருக்கிறது! முட்களுடன்தான் ரோஜாவும் இருக்கிறது!! இந்த உலக உண்மை தெரிந்தும் இரு கூறாகப் பிரிந்து ‘இவரை ஆட்டத்தில் சேர்க்காதீங்க’ என அவர்களும், ‘அவரை ஆட்டத்தில் சேர்க்காதீங்க’ என இவர்களும் சொல்வது வருத்தத்துக்குரியது.

ஆகவே தோழர்களே இந்த வாரத்துடன் நம்ம தடாலடி ஆட்டத்தை முடித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இந்த வாரமே இப்படம் கடேசி! பின்னிப் பொளந்து கட்டிடுங்க!

போட்டி இதுதான்: படத்தைப் பார்த்தீர்கள்தானே! படத்துக்குப் பொருத்தமாக என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம்! அது எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! பரிசு? அதுவும் என்ன வேண்டுமானாலும் (சனிக்கிழமைக்குள் முடிவு செய்து அறிவிக்கிறேன்) இருக்கலாம்!!!!

நன்றி! நன்றி! வணக்கம்! வணக்கம்! (இங்கே எதுக்காக ரெண்டு ரெண்டு தடவை சொல்லியிருக்கேன்னு புரியுதில்லே!!)

பிற் சேர்க்கை: சனிக்கிழமை மாலை 6 மணிவரை வந்து, முதல் கட்டப் பரிசீலணையில் ஜெயித்திருக்கும் பளிச் கமெண்ட்டுகள் கீழே பின்னூட்டங்களின் அணிவகுப்பிலேயே எனது பின்னூட்டமாக வெளியாகியுள்ளது.

343 comments:

«Oldest   ‹Older   201 – 343 of 343
மாயவரத்தான் said...

யானையின் புலம்பல்....

தல (?!) தீவாளிக்கு 400 வடம் சங்கிலி வாங்கிக் கொடுங்கன்னு மாமனார்கிட்ட கேட்டேன்.

கார்மேகராஜா said...

கட்டுனதுதான் கட்டுனான். ஆத்தங்கரையில கட்டியிருக்க கூடாது?
ரெண்டு ஃபிகரையாவது பார்த்துட்டிருக்கலாம்.

கார்மேகராஜா said...

என்னைய பார்த்து குழந்தைக்கு சோறு ஊட்டுறான். எனக்கு ஒரு உருண்டை கொடுத்தா நல்லாயிருக்கும்.

Anonymous said...

நேற்று நீ இழுத்துவந்த பெட்டியில் நான்- இரும்புச்சங்கிலி.

-சென்னையிலிருந்து தமிழி.

கார்மேகராஜா said...

என்னைய கட்டிபோட்டு இருநூறு ஓட்டிட்டாரு கௌதம். இதுக்காவது ஆனந்தபவன்ல டிஃபன் வாங்கித்தரலாம்.

கார்மேகராஜா said...

யானைக்கு மதம் பிடிக்குமா?
என்ன மதம்?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

காட்டுல வலைபோட்டு பிடிச்சாங்க...

நீங்க வலையில போட்டு காட்டுறீங்களா

- ரசிகவ் ஞானியார்
நெல்லையிலிருந்து

கார்மேகராஜா said...

யானை சானி மிதிச்சா நல்லா படிப்பு வருமாம். அதான் சானியை தேடி போயிட்டுருக்கேன்.

திருப்பூர்-கார்மேகராஜா.

Anonymous said...

உள்ளே மிருகம்!
வெளியே கடவுள்!
விளங்க முடியா கவிதை நான்!

-சென்னையிலிருந்து தமிழி.

✪சிந்தாநதி said...

"யப்பா மிதிக்காதே என்னை...யானை கனம் கனக்கிறது..." என்றது சங்கிலி

நாமக்கல் சிபி said...

சங்கிலி சொல்கிறது யானையிடம்.

"எத்தனையோ பாரத்தை இழுக்குறே! என்னை ஒரு பாரமா நினைக்கப் போறியா என்ன?, இங்கயே இருந்துக்குறனே!"

கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கால் = பெண்கள்
சங்கிலி = சீரியல்


- - ரசிகவ் ஞானியார்
நெல்லையிலிருந்து

நாமக்கல் சிபி said...

சங்கிலி : "உயிரில்லாத என்னால உயிருள்ள உன் காலுக்குப் புண்ணாயிடுச்சுனு நினைக்குறப்போ வருத்தமாத்தான் இருக்கு! உனக்கும், எனக்கும் ஈர மனசு இருந்து என்ன பிரயோசனம்? இப்படி கட்டிப்போட்ட மவராசனுக்கும் இருக்கணுமே!"


கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

என்னய விடுங்க என்னய விடுங்க...

மகளா பாவிக்க வேண்டிய மாணவிகளை பாலியல் கொடுமைகள் செய்கிற ஆசிரியர்களை ஒரே ஒரு தடவை மிதிச்சிட்டு வர்றேன்..

-ரசிகவ் ஞானியார்
நெல்லையிலிருந்து

Anonymous said...

தந்தை இல்லை! தாயும் இல்லை! நான் தெய்வம் அன்றி யாரும் இல்லை!!

-சென்னையிலிருந்து தமிழி.

Anonymous said...

ஆமா! அரஸ்ட் பண்ணிடீங்களே!
வாரண்ட் இருக்கா!

-சென்னையிலிருந்து தமிழி.

We The People said...

//நேரடியாக என்னிடம் சொன்ன ஒரு கமெண்ட்:
"முதுமலைக்குப் போவணும், அம்மா வையும்! அவுத்து வுடு!"//

இந்த அம்மா வார்த்தையில எதாவது உள்குத்து இருக்கா கெளதம் ஜீ!! ;)))

கார்மேகராஜா said...

கருப்பா இருந்த ஏன் உடம்பை கலரா மாத்திப்போட்ட!

யானை சூர்யா!

We The People said...

சங்கிலி யானையிடம் பேசுவதுபோல - கெளதம்ஜீயின் ஆசைக்காக:
------
நம்ம ரெண்டுபேரையுமே விலங்குன்னு சொல்லறாங்களே மக்கள் உனக்கு ஏதாவது ஒத்துமை தெரியுதா??

சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

கார்மேகராஜா said...

அண்ணே! நகவெட்டி இருந்தா கொடுங்களேன். நான் நகம் வெட்டிட்டு தரேன்.

கார்மேகராஜா said...

எனக்கு சாமி படத்துல நடிச்சு போரடிக்குது.
அதனால ஒரு மற்றமா இனிமே பேய் படத்துல நடிப்பேன்.

கார்மேகராஜா said...

எனக்கு ஓட்டு போட்டால் யனைக்கால் நோயை நாட்டைவிட்டே துரத்திவிடுவேன்.

நாமக்கல் சிபி said...

//நம்ம ரெண்டுபேரையுமே விலங்குன்னு சொல்லறாங்களே மக்கள் உனக்கு ஏதாவது ஒத்துமை தெரியுதா??
//

சூப்பர்!

siva gnanamji(#18100882083107547329) said...

நீயும் கருப்பு;நானும் கருப்பு.
நீ காட்டிலே பிறந்தே;நான் நாட்டிலே.
நீ மண்ணிற்கு மேலே;நான் மண்ணுக்குள்ளே பிறந்தோம்.
உன்னை அடக்க என்னைப்பிடிச்சான். நான் இறுக்கிப் பிடிச்சா உனக்குக் காயம்;நீ முரண்டு பிடிச்சா எனக்கு
சேதம்.
நீயும் முரடன்;நானும் முரடன்; முரடனுக்கு மரியாதை ஏது? அதான்
உன் காலிலே நான் கிடக்கேன். நளினமான என் தம்பி வெங்கல மணியாய்த் தொங்கி ஓசை எழுப்பி
ஊரை அழைக்கிறான்;பித்தளைச் சங்கிலியாய் ஒருவன் உன் கழுத்தில்
ஜொலிக்கிறான்;கடைக்குட்டித்த்ம்பி
அங்குசமாகி உன்னை அடக்கி வைக்கிறான்.
உனக்கு மழையும் பிடிக்காது;வெயிலும் பிடிக்காது.எனக்குந்தேன்- துருப்பிடிச்சு போய்டுவேன்.
நீ செத்தாலும் ஆயிரம் பொன்.நான் செத்தா வெங்காயமும் ப்ளாஸ்டிக் டப்பாவும்தான்.
நீ ஆடினால் நான் ஆடுவேன்;நான் அசைந்தாலும் நீ அசைவாய்.
உன்னாலே எனக்குப் பெருமை..ஹி..ஹி..என்னாலேயும்
உனக்குப் பெருமைதான்;ஏன்னா நான்
இல்லாங்காட்டி நீ கெட்டவன் ஆய்டுவியே.
உனக்கு தினம் ராஜோபசாரம்;என்னை எவன் கவனிக்கிறான்?
நீ சத்தம் போட்டு சடுகுடு ஆடுனாத்தன் என்னைத் தேடுவான்.
(யானையிடம் சங்கிலியின் புலம்பல் )

நாமக்கல் சிபி said...

ஆரம்பிச்சதும் நான்தான் முடிச்சி வெப்பதும் நான்தான்

We The People said...

சங்கிலி யானையிடம் பேசுவதுபோல - கெளதம்ஜீயின் ஆசைக்காக:#2
------
ராவா, பகலா உன்கூட இருந்து என்ன சுகம் கண்டேன், ஹூம்! நான் கருப்பானது தான் மிச்சம்!

சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

G Gowtham said...

கட்டக் கடைசிப் போட்டி என்பதால் இன்னும் ஒருநாள் அவகாசம் கொடுக்கலாம் என நினைக்கிறேன்! பார்க்கலாம், யாரேனும் புதியவர்களும் வருகிறார்களா என்று!!

நாளை (ஞாயிறு) யும் எடுத்துக் கொள்ளுங்கள்.
முடிவுகள் திங்கள்கிழமை காலையில்.

இந்த முறை குங்குமத்தில் பிரசுரிக்கப் பொருத்தமாக இல்லாவிடினும் வலைப்பூ உலகத்துக்கு பொருத்தமான இன்னும் இரண்டு பங்களிப்புகளுக்கும் முதல் பரிசு கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.

நன்றி நண்பர்களே நன்றி

G Gowtham said...

சனிக்கிழ்மை மாலை 6 மணிவரை வந்து, முதல் கட்டப் பரிசீலணையில் பாஸ் ஆகியிருக்கும் பளிச் கமெண்ட்டுகள் இவை.. போட்டியில் கலந்துகொள்ள இன்னும் ஒரு நாள் இருக்கிறது. இனியும் தொடரலாம் அணிவகுப்பை.

நாமக்கல் சிபி said...
காலுல மாட்டிக்க ஏதுனா வாங்கிக்கொடுன்னு இந்த மனுஷன்கிட்டே கேட்டது தப்பாப் போச்சே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

நாமக்கல் சிபி said...
யானைக் கால் வியாதி பரவாம இருக்க என் காலைக் கட்டி வெச்சிட்டா போதுமா?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

கபீர் முகம்மது said...
ஆத்தா கால்கட்டு போட்டாத்தான் அடங்குவான்னு அப்பவே சொன்னா! அந்த கட்டு இதுதானா?
நாமக்கல்லில் இருந்து கபீர்முகம்மது.

மாயவரத்தான்... said...
டாக்டருகிட்ட போவணும்.. மனுசக் கால் வியாதி வந்துட்ட மாதிரி தெரியுது.

நாமக்கல் சிபி said...
சொன்னா கேளுங்க! எக்ஸிபிஷனுக்கு வந்தா நெயில் பாலீஷ் கேட்டு அடம்பிடிக்க மாட்டேன்! என்னையும் கூட்டிட்டுப் போங்க!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

நாமக்கல் சிபி said...
மதம் பிடிச்சிதுன்னு சொல்லி எனக்கே இரும்புச் சங்கிலின்னா? மனுசங்களுக்கு?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

கபீர் முகம்மது said...
ஆண் யானை : "அட! சும்மா அத்துகினு வாம்மே! அந்த சங்கிலி 23ம் புலிகேசி அரண்மனை கொல்லன் செஞ்சது"
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது

நாமக்கல் சிபி said...
சந்தைக்குப் போகணும்! ஆத்தா வையும்! அவுத்து வுடு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

நாமக்கல் சிபி said...
சிக்கன் குனியா வந்ததுலேர்ந்து முழங்காலெல்லாம் வலி! சங்கிலியைக் கொஞ்சம் அவுத்து விட்டா தேவலை!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

We The People said...
பொறுத்தது போதும்
பொங்கியெழு
கனத்த சங்கிலிகள் - உன்
கால் தூசிக்கு சமம்
முயற்சித்தால் உண்டு
சுதந்திரம்!!!
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

We The People said...
டேய் கட்டதுரை,
எங்க சங்கத்து ஆளை கட்டிப்போட்டது யாரு?
சென்னையிலிருந்து கைப்புள்ள

சிந்தாநதி said...
விடுதலை விழாவில்
யானைகளின் அணிவகுப்பு-
விலங்கிட்ட கால்கள்!
-தமிழ்நாட்டிலிருந்து சிந்தாந்தி

நாமக்கல் சிபி said...
ஆரம்பிச்சதும் நான்தான்! ஐம்பது அடிச்சதும் நான்தான்! கட்டிப் போட்டு வெச்சாலும் கலக்குவம்ல!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

நாமக்கல் சிபி said...
பட்டை போடுறதா நாமம் போடுறதான்னு முடிவு பண்ணிட்டுதான் அவுத்து விடுவாங்களாம்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

நாமக்கல் சிபி said...
லக்கி லுக் பாக்குறதுக்குள்ள நாமக்கல் சிபி களத்துல பூந்துட்டாரே! ஓடிப்போய் லக்கியார்கிட்டே சொல்லலாம்னா கட்டி வெச்சிட்டாங்கப்பா!

கபீர் முகம்மது said...
கட்டிப் போட்டிருக்குற தைரியத்துல ஸ்பூன்ல பால் குடுக்க வர்றாம் பாரு! இவனை...!
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது

மோகினிகள் கழகம் said...
போட்டி நல்ல இருக்கு!
லெக் பீஸை நமக்கே நமக்குனு ஒதுக்கியிருப்பீங்க போல!
நன்றி கௌதம்ஜி!

நாமக்கல் சிபி said...
கடைசிப் போட்டின்னு சொல்லி காலை வேற கட்டி வெச்சிட்டாங்க! பின்னிப் பெடலெடுக்கலாம்னு பார்த்தா முடியலையே!

நாமக்கல் சிபி said...
யோவ்! சங்கிலிய கொஞ்ச நேரம் அவுத்து வுடுய்யா! ஷார்ட்ஸை போட்டுக்குறேன். எல்லாரும் பாக்குறாங்க! வெக்கமா இருக்கு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

sivagnanamji(#16342789) said...
அவனுக்கு மனசிலே கிலி....
எனக்குக் காலிலே சங்கிலி!
சிவஞானம்ஜி/சென்னை-4

சாத்வீகன் said...
அறுத்தெறியும் ஆற்றலுண்டு.
அடங்கிக்கிடக்கிறது ஆனை.

Anonymous said...
பெண் யானை ஆண் யானையிடம் - " உங்களுக்கு ஒரு கொலுசு வாங்க கூட தெரியல! இப்படியா சலங்கை இல்லாம வாங்கிட்டு வருவாங்க?"
Priya, California

sivagnanamji(#16342789) said...
கருப்பு யானைக்கு கருப்பிலே சங்கிலி;
அப்போ சிவப்பு யானைக்கு...?

Zia said...
பாரதியை என் தாத்தன் அடித்ததால் எனக்குத் தண்டனையா?

Zia said...
நாந்தான் 'சங்கிலிக் கறுப்பன்'னா எவனுமே நம்ப மாட்டேங்கறாங்க. அதான்! ஹி ஹி!

Zia said...
கொஞ்சம் பொறுமையா இருங்க யானையாரே!
உங்க உருவம் பெருசு! கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஃபோட்டோ எடுக்க முடியும்.

Zia said...
இந்த சூ-லேஸு மட்டும் எப்பவுமே அவுர மாட்டேங்குது!

வேந்தன் said...
தளையும் தடையும் தடுத்திடுமா என்ன
தறி கெட்ட மனத்தினை.
>> வேந்தன் ஹைதிராபாத்திலிருந்து

தமிழி said...
கட்டியது காலை மட்டும் தான்!
என் மனதையல்ல!
-சென்னையிலிருந்து தமிழி.

தமிழி said...
அங்சுத்துக்கு அடங்காத களிறு நான் அடங்கி நிற்பது, 'நான் கட்டப்பட்டிருக்கிறேன்' என்ற உன் நம்பிக்கைக்காக!
-சென்னையிலிருந்து தமிழி.

sivagnanamji(#16342789) said...
சங்கிலி இல்லே; சத்தியம்தான் என்னைக் கட்டுக்குள் வைக்குது...
சிவஞானம்ஜி/சென்னை-4

Kowsalya said...
கட்டுப் படுத்தலாம்
மதம் கொண்ட யானையை
ஆனால் மனிதனை?

Kowsalya said...
சங்கிலி தொடரை இப்பிடி
சங்கிலியால் நிறுத்தலாமா?
தடாலடி போட்டிய தான் சொல்றேன்

மதுமிதா said...
ஆணுக்குதான் கால்கட்டுப் போடுவாங்க
ஆணைக்குமா?

luckylook said...
--போட்டிக்காக அல்ல---
கட்டப்பட்டிருப்பது
யானையின் கால் அல்ல...
லக்கிலுக்கின் கை :-)

sivagnanamji(#16342789) said...
பட்டையா?
நாமமா?
வடகலையா?
தென்கலையா?
அதெல்லாம் தெரியாது....
சங்கிலி மட்டும் நிச்சயம்!

sivagnanamji(#16342789) said...
நா ஆசி தந்தால்
நீ காசு தருவியா?

இராகவன் (எ) சரவணன் said...
என்னயக் கூடத் தான் பெங்களூருல கூப்டாக.. ஈரோட்டுல கூப்டாக.. சென்னையில கூப்டாக.. கோயமுத்தூருல கூப்டாக... ஆனால எங்க போக விடுறானுக.. கால்ல மட்டும் சங்கிலி இல்லைன்னா இந்நேரம் பிச்சிக்கினு போயிருப்போம்ல.............
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.

மதுமிதா said...
அண்டம் அதிர
ஒரு நடை நடந்தால்போதும்
அனைத்துச் சங்கிலிகளும்
தூள்தூளாகும்
அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்
அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்

நாமக்கல் சிபி said...
அவுத்து வுடுங்கப்பா! இந்தியாவுக்காக நானாவது போய் விளையாடிப் பார்க்குறேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

நாமக்கல் சிபி said...
என்ன லக்கியார் இல்லாம தடாலடிப் போட்டியா? நான் ஆட்டைக்கு வரலை! என்னை அவுத்து உட்டுடுப்பா கௌதம்! நான் போயிடறேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி!

sivagnanamji(#16342789) said...
யானை ஒரு பாலூட்டி;தாவர உண்ணி;நிலம்வாழ் விலங்குகளில் மிகப் பெரியது;வலிமை மிக்கது;நீண்டநாள் வாழக்கூடியது(சுமார் 70 ஆண்டுகள்)

யானைகளில்,சாவன்னா யானைகள்,ஆப்ரிக்க யானைகள்,ஆசியயானைகள் என மூன்று சிற்றினங்கள் உள்ளன.

யானைகளுக்கு மட்டுமே தும்பிக்கை உண்டு; தந்தங்கள், யானையின் கடைவாய்ப்பற்களின் நீட்சி
ஆகும்; தந்தங்கள் 10 அடி வரை
வளரக்கூடியவை;அவற்றின் எடை 90 கி.கி வரை இருக்கலாம்.தந்தங்கள்
இல்லா யானை மக்னா எனப்படும்.

யானையின் சினைக்காலம்
22 மாதங்கள். பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் இதுதான். பொதுவாக யானைகள் ஒரு குட்டியையே ஈனுகின்றன;இரட்டைகள்
பிறப்பது மிக அரிது.

இந்தியாவில், 35000 யானைகள் உள்ளதாகவும்,அதில் 5000
யானைகள் மனிதனால் பழக்கப்பட்டவை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

நீரளவு அதிகமுள்ள ஆற்றுப்
படுகைப் பகுதிகளும்,அடர்ந்து வளர்ந்துள்ள புல்வெளிப்பகுதிகளும்,
யானை விரும்பிவாழும் பகுதிகள்; வறட்சிக்காலத்தில் நீர்நிலை மற்றும் உணவு நாடி இடம்பெயர்வதும் உண்டு.

அவை, 10 முதல் 70 யானைகள் சேர்ந்த கூட்டமாகத்தான்
வாழ்க்கை நடத்துகின்றன;வயதான ஒரு பெண்யானை தலைமைதாங்கி
வழிநடத்தும்.

ஒரே கூட்டத்தைச் சேர்ந்த பெண்யானைகளுடன் இனப்பெருக்கம்
செய்ய அக்கூட்டத்தின் ஆண்யானைகளை தலைவி அனுமதிக்காது;ஆண்யானைகளுக்கு
தந்தம் நன்கு வளர்ந்தவுடன்,அவை விரட்டிவிடப்படும்.

யானைகளின் பார்வை மந்தமானது ("மாக்கண்");செவித்திறனும் மோப்பசக்தித்திறனும் வியப்பளிக்கக்-
கூடிய அளவில் உள்ளன!ஆங்கிலேய
ராணுவம் இந்தியர்களின் யானைப்படைக்கு மிரண்டோடியதும்
உண்டு

யானைகள் நன்கு நீந்தும் திறன்
உடையவை;ஒருமணி நேரத்தில்
4 கி.மீ. நடக்கவும், 17 கி.மீ. ஓடவும்
கூடியவை.எடை 7000 கிலோ;
ஒருநாளைக்கு 150 லிட்டர் தண்ணீர்
பருகும்;முக்கிய எதிரி புலிகள்தாம்!

சங்கஇலக்கியம் உள்ளிட்ட பழம்பாடல்களில் யானைகள் பற்றிக்
குறிப்புகள் உள்ளன.

பஞ்சபூதங்களால் ஆன இந்த
உலகமும் பரமாத்மாவும்,பார்ப்பவர்
கண்ணுக்கு எப்படித் தெரிந்தாலும்,
அவை இரண்டும் ஒன்றுதான் எனபதை அறிக:
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்"
(திருமூலர் திருமந்திரம்)

'யானை இருந்தாலும் ஆயிரம்
பொன்;இறந்தாலும் ஆயிரம் பொன்'.
ஆனால் அவற்றை ஒத்தைரூபாய்க்
காசுக்காக பிச்சை எடுக்கவிட்டானே
மணுசப்பய!


(படத்துக்குப் பொருத்தமாக என்ன வேண்டுமானாலும் எழுதலாம்;அது
எத்தனை வரிகள் வேண்டுமானாலும்
இருக்கலாம்தானே?)

தமிழி said...
என்னம்மா தங்கச்சி! பாக்கற! உன் அண்ணணைக் கட்டிப்போட்டுடாங்கன்னா!
டேய்! டீமில் இருக்காரு கங்குலி!
மரியாதை கழட்டிடுடா இந்த சங்கிலி!
என் பேரு செயின்ஜெயபாலு!
கட்டிட்டாலும் உதைக்கும்டா இந்தக்காலு!
வரட்டா! ஏய் டண்டணக்கா! டணக்குணக்கா!
யக்கா! நான் மாட்டிகிட்டேன்க்கா!
-சென்னையிலிருந்து தமிழி.

நிலவு நண்பன் said...
அட டிசம்பர் 6 வந்தா என்னைய ஏன்ங்க கட்டிப்போடுறீங்க...
அவங்களுக்குத்தான்ங்க மதம் பிடிச்சிருக்கு.. எனக்கு இல்லைங்க...நம்புங்கப்பா..
- ரசிகவ் ஞானியார்

மாயவரத்தான்... said...
யானையின் புலம்பல்....
தல (?!) தீவாளிக்கு 400 வடம் சங்கிலி வாங்கிக் கொடுங்கன்னு மாமனார்கிட்ட கேட்டேன்.

தமிழி said...
நேற்று நீ இழுத்துவந்த பெட்டியில் நான்- இரும்புச்சங்கிலி.
-சென்னையிலிருந்து தமிழி.

கார்மேகராஜா said...
யானைக்கு மதம் பிடிக்குமா?
என்ன மதம்?

நிலவு நண்பன் said...
காட்டுல வலைபோட்டு பிடிச்சாங்க...
நீங்க வலையில போட்டு காட்டுறீங்களா
- ரசிகவ் ஞானியார்
நெல்லையிலிருந்து

சிந்தாநதி said...
"யப்பா மிதிக்காதே என்னை...யானை கனம் கனக்கிறது..." என்றது சங்கிலி

தமிழி said...
ஆமா! அரஸ்ட் பண்ணிட்டீங்களே!
வாரண்ட் இருக்கா!
-சென்னையிலிருந்து தமிழி.

We The People said...
சங்கிலி யானையிடம் பேசுவதுபோல -
நம்ம ரெண்டுபேரையுமே விலங்குன்னு சொல்லறாங்களே மக்கள் உனக்கு ஏதாவது ஒத்துமை தெரியுதா??
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

sivagnanamji(#16342789) said...
நீயும் கருப்பு;நானும் கருப்பு.
நீ காட்டிலே பிறந்தே;நான் நாட்டிலே.
நீ மண்ணிற்கு மேலே;நான் மண்ணுக்குள்ளே பிறந்தோம்.
உன்னை அடக்க என்னைப்பிடிச்சான். நான் இறுக்கிப் பிடிச்சா உனக்குக் காயம்;நீ முரண்டு பிடிச்சா எனக்கு
சேதம்.
நீயும் முரடன்;நானும் முரடன்; முரடனுக்கு மரியாதை ஏது? அதான்
உன் காலிலே நான் கிடக்கேன். நளினமான என் தம்பி வெங்கல மணியாய்த் தொங்கி ஓசை எழுப்பி
ஊரை அழைக்கிறான்;பித்தளைச் சங்கிலியாய் ஒருவன் உன் கழுத்தில்
ஜொலிக்கிறான்;கடைக்குட்டித்த்ம்பி
அங்குசமாகி உன்னை அடக்கி வைக்கிறான்.
உனக்கு மழையும் பிடிக்காது;வெயிலும் பிடிக்காது.எனக்குந்தேன்- துருப்பிடிச்சு போய்டுவேன்.
நீ செத்தாலும் ஆயிரம் பொன்.நான் செத்தா வெங்காயமும் ப்ளாஸ்டிக் டப்பாவும்தான்.
நீ ஆடினால் நான் ஆடுவேன்;நான் அசைந்தாலும் நீ அசைவாய்.
உன்னாலே எனக்குப் பெருமை..ஹி..ஹி..என்னாலேயும்
உனக்குப் பெருமைதான்;ஏன்னா நான்
இல்லாங்காட்டி நீ கெட்டவன் ஆய்டுவியே.
உனக்கு தினம் ராஜோபசாரம்;என்னை எவன் கவனிக்கிறான்?
நீ சத்தம் போட்டு சடுகுடு ஆடுனாத்தன் என்னைத் தேடுவான்.
(யானையிடம் சங்கிலியின் புலம்பல் )

We The People said...
சங்கிலி யானையிடம் பேசுவதுபோல...
ராவா, பகலா உன்கூட இருந்து என்ன சுகம் கண்டேன், ஹூம்! நானும் கருத்துப்போனதுதான் மிச்சம்!
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

Anonymous said...

நானாயா கட்டிக்கிட்டேன். அப்புறம் ஏன்யா 'அத கட்டிக்கிட்டு அழுவுற'ன்னு சொல்ற.

Anonymous said...

வீரபாண்டியன், மனோகரன், இப்ப உன்னை. யாரக் கட்டிப் போட்டாலும் என்ன மட்டும் யாருமே மதிக்கவே மாட்டேங்குறானுங்க!

-- சங்கிலி

நாமக்கல் சிபி said...

//வலைப்பூ உலகத்துக்கு பொருத்தமான இன்னும் இரண்டு பங்களிப்புகளுக்கும் //

இதோ வந்துட்டம்ல!
-----------------------------------
தெரியாத்தனமா டோண்டு சாரோட வலைப்பூ பக்கம் வந்துட்டேன்! போலியார் பார்க்குறதுக்குள்ள அவுத்து விட்டுடுங்க! ஓடிப் போயிடுறேன்!

:))

பெருசு said...

துளசிக்கா,எனக்கு நெயில் பாலீசு வேணும்,
பொன்ஸ் வாங்கியே குடுக்கல.

பெருசு said...

இது பிரேஸ்லட்டா இல்ல கொலுசா.

Anonymous said...

நான் ஊழல் பண்ணுனதை பரிசோதனைப் பண்ண யானை காலில்தான் கட்டனுமா?

-- புலிகேசியின் கொல்லன்

Anonymous said...

கண்ணக் கட்டி வெளாடுறது மாரி, காலக் கட்டி வெளாண்டுட்டிருக்கோம். பின்ன! ஏன் அனுமதி இல்லாம யாராவது எம்மேல கை வெக்க முடியுமாடா?

Anonymous said...

அவன் கால்ல வெலங்க மாட்டுனா கேவலம்னு சொல்றான். ஏன் கால்ல வெலங்க மாட்டுனா மட்டும் ஏன்டா கெளரவம்னு சொல்றீங்க

-- அரசியல் மாநாட்டில் மாலை போடும் யானை.

Anonymous said...

"யானையும் சங்கிலியையும் போல நீடூழி வாழ்க!"

"ஆமா, என் பொண்டாட்டி கால்ல கிடக்கிற சங்கிலி நான்னு சொல்ல வர்றியா?
இல்ல...
அவக் கட்டிபோட்டிருக்குற யானைன்னு சொல்ல வர்றியா?
ரெண்டுமே டேஞ்சராட்சடா?
உன் கல்யாணத்துக்கு வந்து ஊர்காரங்களுக்கு சாப்பாடு இல்லாம பண்ணது என் தப்புதான். அதுக்காக இப்படியாடா சாபம் விடுவ"

siva gnanamji(#18100882083107547329) said...

(சங்கிலியிடம் யானை...)

என்ன பேச்சு பேசறே நீ?
நீயும் விலங்கு,நானும் விலங்குன்றதாலே ரெண்டு பேரும் சமமாய்டுவோமா? நான் யாரு?
என்னைப்போல் உருவம் யாருக்கு இருக்கு;பலம் யாருக்கு உண்டு?
களிறு,வேழம்,வாரணம்னு எனக்கு
எத்தனை பேர் இருக்கு?

உன்னாலே என்னா பிரயோசனம், என்னைக் கட்டிவைப்பதைத் தவிர?
என் சானியை மிதித்தா பித்தவெடிப்பு
போகும்;சிறுநீரைக் குடிச்சா கக்குவான்
பறக்கும்;வால்முடிய வச்சு மோதிரம்
செய்வாங்க;தோலை வச்சு பரிசல்
கட்டுவாங்க;தந்தத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்!

காட்டிலே மரம் சுமக்க,நாட்டிலே
ஊர்வலம் போக நாந்தான் போகணும்..
இந்திய ரயில்வேயின் சின்னமே
போலுயானைதான் தெரியுமா?

என்னா எங்க ஆளுங்களே எங்களைக்
கவுத்துடறாங்க...ஆமா!என்னையக்
காட்டிக் கொடுத்ததும் யானைதான்;
புதைகுழிப் பக்கம் விரட்டிவிட்டதும்
யானைதான்;அடித்து,மிரட்டி, அடிமையாக்கியதும் யானைதான்....

நான் செத்துப்போனாலும் ஆயிரம் பொன்;நீ இற்றுப்போனால் வெங்காயம்தான்!ஆயிரம்பேர் கூடி
நின்னாலும் நான் தனியாத் தெரிவேன்;ஆனா நீ என் கால்லேதான் கிடப்பே...

உனக்கு நான் கட்டுப்பட்டு இருக்கேன்னு
நினைப்பா?இல்லே! சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கேன்...

சரி...சரி...ரொம்ப இறுக்காதே;காலை
உருத்துது...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கால்களின் கோபம் மொத்தமாய்
கிளர்ந்தெழாதவரை
சங்கிலிகளுக்கு
சாவு இல்லை

பி.கு. கால்களுக்கும் இலங்கைத்தமிழர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை


- ரசிகவ் ஞானியார்

நெல்லையிலிருந்து

siva gnanamji(#18100882083107547329) said...

உஸ்ஸ்ஸ்...அப்பாடா! ஒருவழியா
துளசிகிட்டேயும் பொன்ஸ்ட்டேயுமிருந்து தப்பிச்சுட்டோம்னு நினைச்சா
இந்த சங்கிலிப் பயல் தடுக்கப்
பார்க்கிறானே...
(யானையார்)

Anonymous said...

ரிசல்ட் எங்கே?

G Gowtham said...

இன்னும் ஒரு மணி நேரத்தில் ரிஸல்ட்!
குங்குமத்தில் பிரசுரமாகும் அணியில் இரண்டு முதல் பரிசுகள்.
தவிர, வலைப்பதிவாளர் குறும்பு அணியில் ஒரு முதல் பரிசு!
தவிரவிர, ஒரு சில காரணாங்களால் குங்குமத்தில் பிரசுரிக்க இயலாவிடினும் ஸ்பெஷல் முதல் பரிசுக்குரிய அணியில் ஒரு பரிசு.
ஆக மொத்தம் 4 முதல் பரிசுகள்.

Anonymous said...

//இன்னும் ஒரு மணி நேரத்தில் ரிஸல்ட்! : 2:26 PM //

இன்னாபா! ரிசல்ட் பார்க்கப் போலாம்னா கட்டி வெச்சிட்டீங்களே!

அம்பத்தூரிலிருந்து அவசரக் குடுக்கை!

நாமக்கல் சிபி said...

//மொத்தம் 4 முதல் பரிசுகள்//

கடைசிப் போட்டி என்பதால் கலக்கல் பரிசுகளோ!

நாமக்கல் சிபி said...

247!

நாமக்கல் சிபி said...

246!

நாமக்கல் சிபி said...

248

நாமக்கல் சிபி said...

ஹே! 250.

50 அடிச்சதும் நான்தான்.
250 அடிச்சதும் நான்தான்!

G Gowtham said...

குங்குமம் இதழில் பிரசுரமாகும் பரிசுக்குரிய மற்றும் ஆறுதல் பரிசுக்குரிய கமெண்ட்டுகள் இங்கே...

1.காலுல மாட்டிக்க ஏதுனா வாங்கிக்கொடுன்னு இந்த மனுஷன்கிட்டே கேட்டது தப்பாப் போச்சே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

2.ஆத்தா கால்கட்டு போட்டாத்தான் அடங்குவான்னு அப்பவே சொன்னா! அந்தக் கட்டு இதுதானா?
நாமக்கல்லில் இருந்து கபீர்முகம்மது.

3.டாக்டருகிட்ட போவணும்.. மனுசக் கால் வியாதி வந்துட்ட மாதிரி தெரியுது.
மயிலாடுதுறையில் இருந்து மாயவரத்தான்

4.ஆண் யானை : "அட! சும்மா அத்துகினு வாம்மே! அந்த சங்கிலி 23ம் புலிகேசி அரண்மனை கொல்லன் செஞ்சது"
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது

5.சந்தைக்குப் போகணும்! ஆத்தா வையும்! அவுத்து வுடு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

6.விடுதலை விழாவில்
யானைகளின் அணிவகுப்பு-
விலங்கிட்ட கால்கள்!
-தமிழ்நாட்டிலிருந்து சிந்தாந்தி

7.சங்கிலி யானையிடம் பேசுகிறது...
நம்ம ரெண்டுபேரையுமே விலங்குன்னு சொல்லறாங்களே! உனக்கு ஏதாவது ஒத்துமை தெரியுதா??
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

8.அறுத்தெறியும் ஆற்றலுண்டு.
அடங்கிக்கிடக்கிறது ஆனை.
சாத்வீகன்

9.பெண் யானை ஆண் யானையிடம் - " உங்களுக்கு ஒரு கொலுசு வாங்க கூட தெரியல! இப்படியா சலங்கை இல்லாம வாங்கிட்டு வருவாங்க?"
-கலிஃபோர்னியாவில் இருந்து ப்ரியா

10.நேற்று நீ சுமந்துவந்த பெட்டியில் நான்- இரும்புச்சங்கிலி.
-சென்னையிலிருந்து தமிழி.

11.இந்த சூ-லேஸு மட்டும் எப்பவுமே அவுர மாட்டேங்குது!
ஜியா

12.அவுத்து வுடுங்கப்பா! இந்தியாவுக்காக நானாவது போய் விளையாடிப் பார்க்குறேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி

13.கட்டுப் படுத்தலாம்
மதம் கொண்ட யானையை
ஆனால் மனிதனை?
சென்னையில் இருந்து கௌசல்யா

14.ஆணுக்குதான் கால்கட்டுப் போடுவாங்க
ஆணைக்குமா?
மதுமிதா

15.பட்டையா?
நாமமா?
வடகலையா?
தென்கலையா?
அதெல்லாம் தெரியாது....
சங்கிலி மட்டும் நிச்சயம்!
சென்னையில் இருந்து சிவஞானம்ஜி

பரிசுக்குரிய கமெண்ட்டுகள் 7, 8, 9, 10, 12

வலைப்பதிவாளர் குறும்பு அணியில் ஒரு பரிசு பெறுபவரும்
ஒரு சில காரணாங்களால் குங்குமத்தில் பிரசுரிக்க இயலாவிடினும் ஸ்பெஷல் பரிசு பெறுபவரும் இன்னும் சில (ஸாரி பல) நிமிடங்களில் அறிவிக்கப்படுவார்கள்.

ஆக மொத்தம் 5+2= 7 பரிசுகள் இந்தவாட்டி!!

We The People said...

ஷப்ப்ப்ப்ப்ப்பா மறுபடியும் உள்ளவந்திட்டேன்.... ஐயா யாரும் ஜீ மெயில்/கால் போட்டு திட்டாதிங்கபா... எதோ நான் ஒரு தடவை பரிசு வாங்கிக்குறேனே...

சென்னையிலிருந்து வீ த பீப்பிள்க்காக நா.ஜெயசங்கர் ;)

G Gowtham said...

மன்னிக்கவும் நண்பர்களே!
வேலைப்பளு மிக அதிகம், மற்ற இரு வெற்றியாளர்களையும் நாளை அறிவிக்கிறேனே ப்ளீஸ்..

G Gowtham said...

குங்குமத்தில் பரிசு பெற இன்னொரு கமெண்ட்டும் லைஃப்லைனைப் பிடித்து ஓடி வந்திருக்கிறது!! அது..

//சொன்னா கேளுங்க! எக்ஸிபிஷனுக்கு வந்தா நெயில் பாலீஷ் கேட்டு அடம்பிடிக்க மாட்டேன்! என்னையும் கூட்டிட்டுப் போங்க!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.//

Raghavan alias Saravanan M said...

போட்டியில் வெற்றி பெற்ற ஏழு பேருக்கும் மனமார்ந்த் வாழ்த்துக்கள்..

கெளதமுக்கு நன்றி, மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பிற்கு...

Anonymous said...

யானை பலமா இருந்தான் கங்குலி
கட்டிப்போட்டுட்டான் இரும்பு சங்கிலி
வெளிநாட்டுக்குப் போய் வாங்கறாங்க மிதி
வேறென்னா, இதுதானைய்யா இவிங்க விதி


தமிழ் வலைஉலகத்துலேர்ந்து அனானிமஸ்.
(பின்னே..தல இப்ப இருக்கற நெலமைல நம்ம பேர சொல்ல முடியுங்களா?)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

போட்டியில நம்மளோட கமெண்ட்டும் ஜெயித்திருக்க வேண்டும் ஆனால் ஜெயிக்கவில்லை. பொறாமை இருந்தாலும் ஜெயித்தவர்களையும் தொகுத்து வழங்கிய நண்பர் கௌதமுக்கும் வாழ்த்துக்கள்

We The People said...

ஓ இன்னும் நாளை வரவில்லையா தல.. மத்த ரெண்டு கமெண்ட் எங்க சார் ;)

சும்மா டைம் போகல... அது தான்..

ஹீ! ஹீ!!

G Gowtham said...

ஒரு சில காரணங்களால் குங்குமத்தில் பிரசுரிக்க இயலாவிடினும் ஸ்பெஷல் பரிசு பெறுபவர்: சிவஞானம்ஜி
கமெண்ட்:
sivagnanamji(#16342789) said...
யானை ஒரு பாலூட்டி;தாவர உண்ணி;நிலம்வாழ் விலங்குகளில் மிகப் பெரியது;வலிமை மிக்கது;நீண்டநாள் வாழக்கூடியது(சுமார் 70 ஆண்டுகள்)

யானைகளில்,சாவன்னா யானைகள்,ஆப்ரிக்க யானைகள்,ஆசியயானைகள் என மூன்று சிற்றினங்கள் உள்ளன.

யானைகளுக்கு மட்டுமே தும்பிக்கை உண்டு; தந்தங்கள், யானையின் கடைவாய்ப்பற்களின் நீட்சி
ஆகும்; தந்தங்கள் 10 அடி வரை
வளரக்கூடியவை;அவற்றின் எடை 90 கி.கி வரை இருக்கலாம்.தந்தங்கள்
இல்லா யானை மக்னா எனப்படும்.

யானையின் சினைக்காலம்
22 மாதங்கள். பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் இதுதான். பொதுவாக யானைகள் ஒரு குட்டியையே ஈனுகின்றன;இரட்டைகள்
பிறப்பது மிக அரிது.

இந்தியாவில், 35000 யானைகள் உள்ளதாகவும்,அதில் 5000
யானைகள் மனிதனால் பழக்கப்பட்டவை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

நீரளவு அதிகமுள்ள ஆற்றுப்
படுகைப் பகுதிகளும்,அடர்ந்து வளர்ந்துள்ள புல்வெளிப்பகுதிகளும்,
யானை விரும்பிவாழும் பகுதிகள்; வறட்சிக்காலத்தில் நீர்நிலை மற்றும் உணவு நாடி இடம்பெயர்வதும் உண்டு.

அவை, 10 முதல் 70 யானைகள் சேர்ந்த கூட்டமாகத்தான்
வாழ்க்கை நடத்துகின்றன;வயதான ஒரு பெண்யானை தலைமைதாங்கி
வழிநடத்தும்.

ஒரே கூட்டத்தைச் சேர்ந்த பெண்யானைகளுடன் இனப்பெருக்கம்
செய்ய அக்கூட்டத்தின் ஆண்யானைகளை தலைவி அனுமதிக்காது;ஆண்யானைகளுக்கு
தந்தம் நன்கு வளர்ந்தவுடன்,அவை விரட்டிவிடப்படும்.

யானைகளின் பார்வை மந்தமானது ("மாக்கண்");செவித்திறனும் மோப்பசக்தித்திறனும் வியப்பளிக்கக்-
கூடிய அளவில் உள்ளன!ஆங்கிலேய
ராணுவம் இந்தியர்களின் யானைப்படைக்கு மிரண்டோடியதும்
உண்டு

யானைகள் நன்கு நீந்தும் திறன்
உடையவை;ஒருமணி நேரத்தில்
4 கி.மீ. நடக்கவும், 17 கி.மீ. ஓடவும்
கூடியவை.எடை 7000 கிலோ;
ஒருநாளைக்கு 150 லிட்டர் தண்ணீர்
பருகும்;முக்கிய எதிரி புலிகள்தாம்!

சங்கஇலக்கியம் உள்ளிட்ட பழம்பாடல்களில் யானைகள் பற்றிக்
குறிப்புகள் உள்ளன.

பஞ்சபூதங்களால் ஆன இந்த
உலகமும் பரமாத்மாவும்,பார்ப்பவர்
கண்ணுக்கு எப்படித் தெரிந்தாலும்,
அவை இரண்டும் ஒன்றுதான் எனபதை அறிக:
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்"
(திருமூலர் திருமந்திரம்)

'யானை இருந்தாலும் ஆயிரம்
பொன்;இறந்தாலும் ஆயிரம் பொன்'.
ஆனால் அவற்றை ஒத்தைரூபாய்க்
காசுக்காக பிச்சை எடுக்கவிட்டானே
மணுசப்பய!

இந்தக் கமெண்ட்டுக்கு ஒதுக்கும் இடத்தில் பல ஆறுதல் பரிசுக்காரர்களுக்கு இடமளிக்கலாம் என்பதால் சிஜியிடம் சொல்லிக்கொள்ளலாம் என்ற உரிமையில் இதழில் இடம்பெறாத முதல் பரிசுக்குரிய கமெண்ட்டாக இதனை தேர்வு செய்துவிட்டேன்!


வலைப்பதிவாளர் குறும்பு அணியில் பரிசு பெறுபவர்கள் மூன்று பேர்!
//We The People said...
டேய் கட்டதுரை,
எங்க சங்கத்து ஆளை கட்டிப்போட்டது யாரு?
சென்னையிலிருந்து கைப்புள்ள//

//நாமக்கல் சிபி said...
கடைசிப் போட்டின்னு சொல்லி காலை வேற கட்டி வெச்சிட்டாங்க! பின்னிப் பெடலெடுக்கலாம்னு பார்த்தா முடியலையே!//

//பெருசு said...
துளசிக்கா,எனக்கு நெயில் பாலீசு வேணும்,
பொன்ஸ் வாங்கியே குடுக்கல.//

அப்புறம் இன்னொருத்தருக்கும் ஸ்பெஷலாக முதல் பரிசு கொடுக்கலாம்னு இருக்கேன். அவர்:
//மோகினிகள் கழகம் said...
போட்டி நல்ல இருக்கு!
லெக் பீஸை நமக்கே நமக்குனு ஒதுக்கியிருப்பீங்க போல!
நன்றி கௌதம்ஜி!//
கண்ணம்மாபேட்டையில் இருந்து மோகினிங்க வெளியே வர்றதா இருந்தா வந்து பரிசை வாங்கிக்கலாம்!

எல்லோருக்கும் ஒரு முக்கிய விஷயம்..
நாங்க சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்ல!
ரெண்டு பேருக்கு முதல் பரிசுன்னுதான் சொல்லியிருந்தேன் ஆரம்பத்துல!
ஆனால் இப்ப மொத்தம் 6+3+1+1=11 முதல் பரிசுகள் கொடுத்துட்டேன்.

ஆறு பேருக்கு குங்குமத்தில் இருந்து வழக்கம்போல் பரிசு வந்து சேரும்.

மத்த நாலு பேருக்கும் பரிசு கொடுக்குறதுக்கான வாய்ப்பை எதிர்பார்த்துட்டிருக்கேன். வந்ததும் சொல்றேன்.

மோகினிகள் கழ்கத்தைத்தான் என்ன பண்றதுன்னு தெரியல?!!!!!!

லக்கிலுக் said...

பரிசு பெற்ற மனிதர்கள் மற்றும் மோகிணிகளை வாழ்த்துகிறேன்!

கடைசிப் போட்டி என்பதால் செண்டிமெண்டாக என் மனம் கொஞ்சம் பாதித்திருந்ததால் போட்டியில் அவ்வளவாக கலந்துகொள்ளவில்லை :-(

தடாலடிப் போட்டிகள் வேறு வகையிலாவது தொடரவேண்டும் என்பதே என் விருப்பம்....

siva gnanamji(#18100882083107547329) said...

மூன்று முதல் பரிசுகளைக் குவித்த நாமக்கல் சிபி; இரண்டு முதல் பரிசுகள் ஈட்டிய நா.ஜெயசங்கர்(வி தி பீப்பிள்);
தலா ஒரு பரிசு பெற்ற
சாத்வீகன்,
ப்ரியா,
தமிழி,
பெரிசு,
மோகினிகள் கழகம்,
மற்றும் ஆறுதல் பரிசுகள் பெற்ற
நண்பர்கள் ஆகிய
அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்!

அனைத்துத் தடாலடிப் போட்டிகளிலும்
பங்கேற்கவும்,
மூன்று போட்டிகளில் முதற்பரிசு பெறவும்,
மற்ற போட்டிகள் ஒவ்வொன்றிலும்
ஆறுதல் பரிசுகள் பெறவும் வாய்ப்பளித்த குங்குமம் ஆசிரியர் குழுவிற்கும்,
கெளதம்.ஜி அவர்களுக்கும்
நன்றி! நன்றி! நன்றி!

'தடாலடி போட்டிகள்' பற்றிய கெளதம்
அவர்களின் முடிவு பற்றி........

'நாட்டாம! தீர்ப்ப மாத்து.....'

Anonymous said...

'குங்குமம்' அலுவலக வாசலில்....

"இந்தாப்பா செக்யூரிட்டி,
மோகினிகள் கழகத்திலேர்ந்து
வந்திருக்கோம்னு கெளதம் அய்யாகிட்டே போய் சொல்லு..."

We The People said...

தடாலடிய என் இரண்டு கமெண்ட் வெற்றிப்பெற்றது, நானே எதிர் பார்க்கல... நன்றி கெளதம்.

ஜீ, ஒரே ஒரு வேண்டுகோள். நம்ம மக்கள் இங்கயாவது வந்து ஜாலி தங்கள் கருத்துக்களை, கமெண்டுக்களை எழுதி, ஏதோ ஒரு போட்டின்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. தயவு செய்து பெருவாரியான மக்களின் (வலைபதிவாளர்ளின்) வேண்டுகோளை ஏற்று நீங்க இந்த போட்டியை தொடர்ந்து நடத்தனும் என்பது என் ஆசை! ப்ளீஸ் நோ சொல்லாம நடத்துங்க!!

Anonymous said...

"நாட்டாம! தீர்ப்ப மாத்து.........!"

ரிப்பீட்டேய்!

Anonymous said...

'நாட்டாமே தீர்ப்ப மாத்து....)

ற்ற்றிப்பீட்டேய்!

dubukudisciple said...

ஒரு
விலங்கே!
விலங்கை!
தாங்கி
பிடித்துள்ளதே!!

கொஞ்சம் லேட்டா வந்துடேன் அண்ணாச்சி.. மன்னிக்கவும்

dubukudisciple said...

எப்படியோ ஒரு போட்டோவ போட்டே இருநூறுக்கு மேல பின்னுட்டம் வாங்கிடீங்க ... கலக்குங்க

We The People said...

'தடாலடி போட்டிகள்' பற்றிய கெளதம்
அவர்களின் முடிவு பற்றி........

'நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லுங்க....'

ரிப்பீட்டு! ரிப்பீட்டு!!! ரிப்பீட்டு!!!!

கார்மேகராஜா said...

///'தடாலடி போட்டிகள்' பற்றிய கெளதம்
அவர்களின் முடிவு பற்றி........

'நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லுங்க....'

ரிப்பீட்டு! ரிப்பீட்டு!!! ரிப்பீட்டு!!!! ///


ரிப்பீட்டு!

Anonymous said...

எனது வேண்டுகோளை தனியாக பதிவிட்டுள்ளேன்.

இதைப் படிக்கவும் நண்பர்களே!

http://thamili.blogspot.com/2006/12/blog-post_13.html

Maravandu - Ganesh said...

எலே வெண்ணை ...சங்கிலிய அவுத்துவுடுறியா ..இல்ல சங்குல மிதிக்கட்டுமா ? :-)))

Anonymous said...

//இந்தாப்பா செக்யூரிட்டி,
மோகினிகள் கழகத்திலேர்ந்து
வந்திருக்கோம்னு கெளதம் அய்யாகிட்டே போய் சொல்லு..."
//

அக்காங்க்ப்பா! நாமளே ஸ்ட்ரைய்ட்டா டீல் பண்ணிக்கிறோம்! வேற யாரும் ரெப்ரசண்டேட் பண்ணாதீங்கோ!

பொன்ஸ்~~Poorna said...

//துளசிக்கா,எனக்கு நெயில் பாலீசு வேணும்,
பொன்ஸ் வாங்கியே குடுக்கல.//

பெருசு.. இதைப் பார்க்காம விட்டுட்டேனே.. :))) அது சரி :))) நெயில் பாலீஸ் எல்லாம் போட்டா யானைக்கு ஏதாச்சும் தோல் பிராப்ளம் வந்துடும்.. நோ கெமிக்கல் ;)

கௌதம் ,

// 'நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லுங்க....'

ரிப்பீட்டு! ரிப்பீட்டு!!! ரிப்பீட்டு!!!!


ரிப்பீட்டு! //

ரீப்பீட்டு.. ரிப்பீட்டு, ரிப்பீஈஈஈஈட்ட்ட்ட்டூ!!! :)

G Gowtham said...

//மோகினிகள் கழகம் said...
அக்காங்க்ப்பா! நாமளே ஸ்ட்ரைய்ட்டா டீல் பண்ணிக்கிறோம்! வேற யாரும் ரெப்ரசண்டேட் பண்ணாதீங்கோ! //
மக்களே! நேத்து ராத்திரிலருந்து எனக்கு குளிச் காய்ச்சல்! மோகினி பேசுச்சுங்க என் போன்ல!! பரிசை அவங்க கழகம் சார்புல ஒருநாள் நடு ராத்திரி வந்து வாங்கிக்குறதா சொன்னிச்சு!!!

ஆனா மோகினி ஏன் ஆம்பளக்குரல்ல பேசுச்சுன்னுதான் தெரில... :-)

Anonymous said...

//ஆனா மோகினி ஏன் ஆம்பளக்குரல்ல பேசுச்சுன்னுதான் தெரில//

எங்களுக்கு மிமிக்ரியும் தெரியும்!

Anonymous said...

மோகினிகள் மொதல்லே அப்டிதான்
பேசும்.....போகப் போகத்தேன்......

நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க

ரிபீட்டேய் 10 தடவை

Anonymous said...

//மக்களே! நேத்து ராத்திரிலருந்து எனக்கு குளிச் காய்ச்சல்! //

நாங்க பேசினதுக்கே இப்படியா?

இன்னும் பரிசளிப்பு விழாவுக்கு ஆவி அண்ணாச்சி, ஆவி அம்மணி, கொள்ளிவாய்ப் பிசாசு, குட்டிச்சாத்தான்ஸ் கிளப்புன்னு நம்ம ஊர்க்காரவுக எல்லாரும் கூட வருவோம்னு சொல்லி இருக்காங்க!

உங்க ஆஃபீஸ்ல எடம் இருக்கா எல்லோரும் உட்காருற மாதிரி?

(அட்லீஸ்ட் வெளியில காம்பவுண்டுல மரமெல்லாம் இருக்குல்ல, நாங்க அப்படியே ஹாயா தொங்கிக்குவோம்)

We The People said...

தலைவரே எங்க கோரிக்கைக்கு இன்னும் பதில் வர காணோமே?? ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

✪சிந்தாநதி said...

பத்து நாளா பதிவு கூட போடக் காணோம்!!

டபுள் செஞ்சுரி அடிச்ச களைப்பு போல!!:-))

G Gowtham said...

இத்தனை நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் சில சங்கடங்கள் என்னைச் சூழ்ந்திருப்பதால் இப்போதைக்கு தடாலடிப் போட்டிகளைத் தொடர இயலாத நிலையில் இருக்கிறேன்.
பிகு பண்ணுவதாக தப்பர்த்தம் செய்துகொள்ள வேண்டாம் நண்பர்களே.
மறுபடியும் விரைவில் வருவேன் இன்னும் புதிதாய்!

G Gowtham said...

இன்னொரு விஷயம்.. தமிழி அவர்கள் தடாலடி போட்டிகள் பற்றி எழுதியிருந்த பதிவினைப் படித்தேன்.
போட்டியை நிறுத்திவிட நான் முடிவு செய்ததற்கு தானே காரணம் என வருந்தியிருக்கிறார் தமிழி. இது அவரது பெருந்தன்மையையே இது காட்டுகிறது!
இது குறித்து என்னுடன் பேசிய(போன்/மெயில்)அந்த சில நண்பர்களில் தமிழியும் ஒருவர், ஆனால் அவர் மட்டுமே அல்ல!
உங்களை நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை தமிழி, நீங்கள் லக்கிலுக் பெயரை மட்டுமே சொன்னீர்கள். நான் குறிப்பிட்டது ஆட்களைக் கூறு கட்டிப் பேசியவர்கள் பற்றித்தான்! தமிழி உங்கள் பெருந்தன்மைக்காவது ஒரு தடாலடி போட்டி நடத்தலாம்தான். ஆனால் இப்போது அல்ல, காலம் வரட்டும் வருகிறேன்!

Anonymous said...

//.....சங்கடங்கள்.......//

சங்கடங்கள் தீரட்டும்!

லக்கிலுக் said...

போட்டி புது வடிவில் வீறுகொண்ட நடையுடன் விரைவில் வரும் என நம்புவோம்.

இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் 275ஐ தாண்டிவிட்டதை தடாலடியார் கவனித்திருப்பார்.

தடாலடிப் போட்டிகளுக்கான மவுசு என்றுமே குறையப் போவதில்லை....

Anonymous said...

நன்றி, கெளதம்ஜி புரிந்து கொண்டமைக்கு...

..விரைந்து வாருங்கள்..!

காத்திருக்கிறோம்..!!ஆவலுடன்...!!

வாழ்த்துகள் இப்போதே.

நன்றிகள் பல ..இவ்வார குங்குமத்தில் எங்கள் பதிவுகளை வெளியிட்டமைக்கு...

Anonymous said...

லக்கி லுக் அவர்களே, ஸமீபத்தில்
பின்னூட்டம் 285 ஐத் தாண்டியாச்சு!
ஏன் 275 னு குறைச்சு ஸொல்றீங்க?

Anonymous said...

287 வது ஆளா நானு

// 'நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லுங்க....'

ரிப்பீட்டு! ரிப்பீட்டு!!! ரிப்பீட்டு!!!!


ரிப்பீட்டு!
ரீப்பீட்டு.. ரிப்பீட்டு, ரிப்பீஈஈஈஈட்ட்ட்ட்டூ!!! :)
//
ரிப்பீட்டு

டெல்லியிலிருந்து சென்ஷி

Anonymous said...

ஒரே ஒரு படத்துக்கு
287 பின்னூட்டங்களா!
என்ன நடக்குது இங்கே?

G Gowtham said...

//ஒரே ஒரு படத்துக்கு
287 பின்னூட்டங்களா!//
இல்லை, இப்ப 289
:-)

லக்கிலுக் said...

விரைவில் த்ரிபிள் செஞ்சுரி

G Gowtham said...

//விரைவில் த்ரிபிள் செஞ்சுரி //
லக்கி,
சும்மா வந்துடுமா த்ரிபிள்?!
கடேசிக்கு கடேசின்னு ஒரு தடதடதடாலடி வச்சுக்கலாமா?

இதான் போட்டி..
படம்: இதே சங்கிலி யானைதான்!
அதிக பட்சம் மூணு வார்த்தைகளுக்குள் கமெண்ட் அடிக்கணும்..
இதுவரை வந்த தாட் திரும்ப ரிப்பீட் ஆகக்கூடாது.
போட்டிக்கான கெடு நேரம்: இன்று மாலை 6 மணி வரையே.
பரிசு: வெற்றிபெறப்போகும் அந்த ஒரே ஒரு வலையுலக வீரருக்கு அல்லது வீரிக்கு அல்லது அவர் சார்பாக அனுப்பப்படும் நண்பருக்கு 'ஒரு மாலை.. ஒரு விருந்து!'. அதுவும் இன்று முன்னிரவிலேயே!!

லக்கி ஆட்டத்துக்கு ரெடியா?!

Anonymous said...

ஆ..என்ன வெய்ட்டு!!

Anonymous said...

பூட்டு போட மறந்துட்டாங்களே!!

Anonymous said...

பழைய இரும்புக்கு பேரீச்சம்பழமா?

மதுமிதா said...

300 எடுக்க வாழ்த்துகள் கௌதம்

மதுமிதா said...

ஆறுதல் பரிசுன்னா என்ன?

மதுமிதா said...

யானை சங்கிலி படம்

மதுமிதா said...

சொந்த செலவில் சூன்யம்

Anonymous said...

கால்ல எறும்பு கடிக்குதே!!

மதுமிதா said...

உணர் உதை உடை

மதுமிதா said...

300 ஆச்சா கௌதம்

மதுமிதா said...

படம் பாடம் வாழ்க்கை

லக்கிலுக் said...

சங்கிலி... ங்கிலி... கிலி...




(பார்த்திபன் ஸ்டைல் கவிதை :-)

லக்கிலுக் said...

ஆனையின் கைகளில் பிரஸ்லேட்!


(முன்னங்கால்களை கை என்று பொருள் கொள்க)

லக்கிலுக் said...

குண்டர் சட்டத்தில் கைதானவர்

லக்கிலுக் said...

நில்...

கவனி...

அவுத்துவிடு...

லக்கிலுக் said...

அவுத்துடு, இல்லே அழுதுடுவேன்!

siva gnanamji(#18100882083107547329) said...

சாந்தி காலில் சங்கிலி!

siva gnanamji(#18100882083107547329) said...

யானை+சங்கிலி=பூனை.

siva gnanamji(#18100882083107547329) said...

உடை, உதை, ஓடு!

siva gnanamji(#18100882083107547329) said...

அவுத்த்வுடு, இல்லே
அறைஞ்சிடுவேன்!

siva gnanamji(#18100882083107547329) said...

கிலி...ங்கிலி...சங்கிலி!

siva gnanamji(#18100882083107547329) said...

தடாலடி காலுக்கு சங்கிலி..

siva gnanamji(#18100882083107547329) said...

சங்கிலி அறுந்தா(ல்) சாத்துபடிதான்.

siva gnanamji(#18100882083107547329) said...

இந்தியர் சுதந்திரம் இதுதான்.

siva gnanamji(#18100882083107547329) said...

யானைத்தன்மை சோதனையா?முடியாது..

siva gnanamji(#18100882083107547329) said...

பிரேஸ்லெட்னு நினைச்சு ஏமாந்தேன்.

✪சிந்தாநதி said...

விலங்கின் காலில் விலங்கு

✪சிந்தாநதி said...

விலங்கல்ல இது வீரச்சங்கிலி

✪சிந்தாநதி said...

தளையிட்டாலும் தாள் பணியேன்!

✪சிந்தாநதி said...

யானை கட்டிப் போரடிப்போம்

✪சிந்தாநதி said...

மதவெறியனைக் கட்டி வை

✪சிந்தாநதி said...

காட்டில் விடுதலை! நாட்டில்...?

✪சிந்தாநதி said...

காட்டுயானை நாட்டில் கைது!

✪சிந்தாநதி said...

அடிமைச் சங்கிலி அறுத்தெறி

Anonymous said...

விடுகதையோ இந்த வாழ்க்கை!
-சென்னையிலிருந்து தமிழி.

siva gnanamji(#18100882083107547329) said...

இட ஒதுக்கீடு மசோதா!

Anonymous said...

அவுத்துவிடுங்க பிள்ளையாரை உடைக்கிறார்கள்.
-சென்னையிலிருந்து தமிழி.

✪சிந்தாநதி said...

அகலக்கால் வைக்காதே... அகப்படுவாய்...!

Anonymous said...

இடுக்கண் நகுக!

✪சிந்தாநதி said...

காவலன் காலுக்கு விலங்கு

✪சிந்தாநதி said...

காவலனுக்கும் கால்விலங்கு

siva gnanamji(#18100882083107547329) said...

காலை வலிக்குது;விடுங்கப்பா..

✪சிந்தாநதி said...

கழுத்துக்கும் வேணும் சங்கிலி

✪சிந்தாநதி said...

காடுவிட்டதும் காலில் சங்கிலி

siva gnanamji(#18100882083107547329) said...

தாரளமயம்-இந்திய ஸ்டைல்

✪சிந்தாநதி said...

பொண்ணுக்கு மட்டும் பொன்சங்கிலியா?

siva gnanamji(#18100882083107547329) said...

வெகுஜன வேண்டுகோளை ஏற்று, மீண்டும் ஒரு போட்டி நடத்திய

நாட்டாமைக்கு நன்றி!

✪சிந்தாநதி said...

ஞானப்பழம் கிடைக்காதிருக்க சதி

✪சிந்தாநதி said...

ஆணியில் பிணைத்த ஆனை

✪சிந்தாநதி said...

ஆணைக்கு ஆனையும் அடங்கும்

G Gowtham said...

இதோ பார்ட் டூ முடிவுகள்...
பரிசுக்குரியவர் லக்கிலுக்!
எனக்காக போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த சந்தனமுல்லை, சிவஞானம்ஜி, தமிழி, மதுமிதா, சிந்தாநதி அனைவரும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி தோழர்களே..

siva gnanamji(#18100882083107547329) said...

லக்கியாருக்குப் பாராட்டுகள் !

வேடிக்கை என்னவென்றால், இதே
கமெண்ட்டை நானும் சிந்தித்து தட்டச்சு செய்ய முயலும்பொழுதுதான்
லக்கியார் முந்திக்கொண்டதைப்
பார்த்தேன்!
பிறகு சிறிதே மாற்றிப் போட்டேன்...

நன்றி கெளதம்!

லக்கிலுக் said...

"குட்டி" தடாலடியில் எனக்குப் பிடித்த இரு கமெண்டுகள் :

"அவுத்துவிடுங்க பிள்ளையாரை உடைக்கிறார்கள்" - தமிழி

"சாந்தி காலில் சங்கிலி"- சிவஞானம்ஜி

ரெண்டுமே செம டைமிங் ஷாட்

Anonymous said...

// luckylook said...
"குட்டி" தடாலடியில் எனக்குப் பிடித்த இரு கமெண்டுகள் :

"அவுத்துவிடுங்க பிள்ளையாரை உடைக்கிறார்கள்" - தமிழி

"சாந்தி காலில் சங்கிலி"- சிவஞானம்ஜி

ரெண்டுமே செம டைமிங் ஷாட் //

எப்படியோ எனக்கு அதிர்ஷ்டப் பார்வை பட்டிடுச்சுங்க..
:) :0

ஆமா, கெளதம்ஜி எங்க கூட்டிக்கொண்டு சென்றார்ன்னு சொல்லவே இல்லை..

ஹி ஹி...:)

Anonymous said...

//sivagnanamji(#16342789) said...
யானைத்தன்மை சோதனையா?முடியாது..
//
இதுவும் நல்லா இருந்துச்சு...

«Oldest ‹Older   201 – 343 of 343   Newer› Newest»