
பல வருடப் போராட்டத்துக்குப் பின் இயக்குநராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. தயாரிப்பாளர் ஓ.கே. ஹீரோ யார் எனத் தீர்மானித்ததும் ஷூட்டிங் ஆரம்பம்!
ஆசை ஆசையாக தான் செதுக்கி வைத்திருக்கும் கதையை ஒரு ஹீரோவிடம் சொன்னார் இயக்குநர். அலட்சியத்துடன் கேட்ட ஹீரோ, “பிடிக்கவில்லை” என்றார்! அதற்கான காரணங்களாக பத்து குறைகளைப் பட்டியலிட்டார்.
வருத்தத்தோடும் கோபத்தோடும் வெளியேறிய இயக்குநர், ஹீரோ சொன்ன பத்து விஷயங்களில் அபத்தங்கள் போக நியாயமானதாக தோன்றிய ஐந்து பாயிண்ட்டுகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டார். கதையில் அவற்றைச் சரி செய்தார். இன்னொரு ஹீரோவைத் தெடிப்போய்க் கதை சொன்னார்.
இரண்டாவது ஹீரோவும் நடிக்க மறுத்தார்! அவரும் பத்து குறைகளைப் பட்டியலிட்டார்
இயக்குநர் இந்த முறை கோபப்படாமல் யோசித்தார். தனக்குச் சரி எனப்பட்ட நான்கு விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதையை மறுபடியும் சரி செய்தார். மூன்றாவது ஹீரோவைத் தேடிப்போனார்.
அவரும் ‘நோ’ சொன்னார்! காரணமாக அவரும் ‘பத்து குறைகள்’ சொன்னார்.
இப்போது இயக்குநர் வருத்தம் கூடப் படவில்லை! இந்தப் பத்தில் தேறிய மூன்றினை எடுத்துக்கொண்டார். சரி செய்தார்.
புதிதாக ஒரு பையனைப் பிடித்து ஹீரோவாக நடிக்க வைத்தார். படம் சூப்பர் ஹிட்!
வெற்றிவிழா மேடையில் இயக்குநரைப் புகழ்ந்து தள்ளிய தொகுப்பாளர், “இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் என்ன?” எனக் கேட்டார். இயக்குநர் நெகிழ்ச்சியுடன் சொன்னது?
?
?
?
?
?
?
?
?
“என் கதையில் இருந்த ஓட்டைகளை நான் அடைத்துக்கொள்ள உதவிய அந்த மூன்று ஹீரோக்களே காரணம். அவர்கள் சொன்னதில் சில திருத்தங்களைச் செய்தபிறகுதான் ‘அறிமுக ஹீரோவை வைத்தும் ஜெயிக்க முடியும்’ என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. உதைபடும் பந்துதான் உயரத்துக்குப் போகும் என்ற உண்மையை எனக்கு உணர்த்தியவர்கள் அவர்கள்”
முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' : இங்கே!
7 comments:
உண்மை! உண்மை!! உண்மை!!!
அசத்தல்!
அருமையா இருக்குங்க...
ஆனால் நம்ம ஹீரோக்களுக்காக கதைய மாத்தினா கடைசியா கதையே இருக்காதே ;)
சூப்பரு. நல்ல கருத்து. ஆமா...ஒங்கள வெச்சுப் படமெடுத்த அந்த இயக்குனரு யாரு? ;-)
அருமையான ஒரு விஷயத்தை அழகாக சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க...
Good One
Thats where attitude matters..
நான் கூட கடைசியில வெறுப்பான இயக்குநர் அவரே ஹீரோவாயிடுவாருன்னு நெனச்சேன்..
ஆனால் உங்க முடிவும் ஒரு மாதிரியாத் தோணிச்சி...
நல்லாருக்குங்க கெளதம்...
Post a Comment