நண்பர்களே!
சற்றேரக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகு இன்றுதான் கணிணிப் பக்கம் கவனம் செலுத்த முடிந்திருக்கிறது!!
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இங்கே வலைப்பூவில் வெளியான என் காதல் பால் கதைகள் அழகிய புத்தகமாக உருப்பெற்றிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் வெளியீடு. விலை ரூபாய் 55.
ஆனந்த விகடனில் அல்லாது வேறு ஒரு வார இதழில் (குங்குமம்) வெளிவந்த தொடரினை விகடன் பிரசுரம் நூலாக வெளியிடுவது இதுவே முதன்முறை. அந்த வகையில் என் தாய்வீடான விகடன் எனக்களித்திருக்கும் மதிப்பிட இயலாத பரிசு இது.
நூல் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் விகடன் பிரசுரத்தின் ஸ்டாலில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இன்னும் ஒரு மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுக்கொண்டு,
அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.
பொங்கலோ பொங்கல்!
17 comments:
வாழ்த்துக்கள் கௌதம். இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள், மிஸ்டர் கெளதம்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கும் மங்களம்
எங்கும் என்றும்
தங்குக!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
சிறில் அலெக்ஸ்,
நாடோடி,
சுப்பையா ஐயா,
சிவஞானம்ஜி,
சிந்தாநதி,
வைசா..
நினைவுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி நண்பர்களே!
கெளதம்,
வாழ்த்துக்கள்!!
மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்!!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
கௌதம்
பொங்கல் வாழ்த்துக்கள். விகடன் வெளியீட்டுக்கும் பாராட்டுக்கள்
யோகன் பாரிஸ்
சிவபாலன் மற்றும் யோகன்
இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
முகம் தெரியா உங்கள் நட்பையும் அன்பையும் சம்பாதித்ததை எண்ணி மகிழ்கிறேன் நண்பர்களே..
வாழ்த்துக்கள் கெளதம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
பொங்கல் வாழ்த்துகள் கௌதம்.
மகிழ்ச்சியான தை பிறந்த, புத்தகம் வந்த செய்தி :)
வாழ்த்துக்கள் கெளதம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
பொங்கல் வாழ்த்துகள் கௌதம்.
மகிழ்ச்சியான தை பிறந்த, புத்தகம் வந்த செய்தி :)
ஹேய்.... ஹேய்....
எங்க தடாலடி தலை வந்தாச்சுடோய்!!!!
ஹேய்.... ஹேய்....
இனிமே போட்டிகளுக்கும், பரிசுகளுக்கும் பஞ்சமேயில்லைடோய்.....!!!!!
- இந்த கமெண்டு மாட்டுப் பொங்கல் அன்று மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு போன ஒரு வலைப்பதிவருடையது :-)))))
வாழ்த்துக்கள் கௌதம்.
nanum vikatanil parthaen ungal puthtagathai eppadi adhuvum gungumathil vandha thodarai eppadi vikatan veliyidukiradhu ena yosithane..a
sir adhu sari eppadi vikatan idhai veliyittadhu?
வாழ்த்துக்கள் கௌதம்...
பொங்கலுக்கும், புத்தகத்துக்கும் அடுத்து சொல்லப் போகும் நல்ல செய்திக்கும்!!!
வாழ்த்துக்கள் கெளதம்...கலக்குங்க...
Post a Comment