சூப்பர் ஸ்டாரின் ‘குசேலன்' படத்தை முதல் நாள் பார்க்க ரெடியா?
விவரம் இன்னும் சில நிமிடங்களில்...
பிற்சேர்க்கை 10:
G Gowtham said...
குசேலன் தடாலடி!!போட்டிக்கான புகைப்படம் அதேதான். இடம், பொருள், சூழல்.. எதை வேண்டுமாலும் மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், ரஜினியிடம் கமல் என்ன பேசுவார் என ‘மாத்தி யோசி'க்க வேண்டும்!
குசேலன் தடாலடி!!போட்டிக்கான புகைப்படம் அதேதான். இடம், பொருள், சூழல்.. எதை வேண்டுமாலும் மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், ரஜினியிடம் கமல் என்ன பேசுவார் என ‘மாத்தி யோசி'க்க வேண்டும்!
அம்புட்டுதான் போட்டி!ஜாலியாக யோசியுங்கள். ஆனால் சீரியஸாக போட்டியில் கலந்து கொள்ளுங்கள். பரிசு பரம சீரியஸ்!சொன்ன மாதிரியே ‘குசேலன்' படம் ரிலீஸாகும் அன்று தடாலடி டிக்கெட் தர நான் ரெடி.
மொத்தம் மூன்று பேருக்குப் பரிசு தரலாம் என இப்போதைக்கு முடிவெடுத்திருக்கிறேன். நாளை நடப்பதை நானறியேன்! :-)
அதேபோல குசேலனைப் பார்க்கும் வாய்ப்பை சென்னை அல்லது கோவை அல்லது நெல்லையில் வழங்கலாம் எனவும் முடிவெடுத்துள்ளேன். எந்த ஊரில் படம் பார்க்கலாம் என வெற்றியாளரே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
கமலாக உருமாறி களமிறங்குங்கள். குசேலனை வெல்லுங்கள்.
-------------------------------------------------------------------------------
தசாவதாரம் படத்துக்கு தடாலடி டிக்கெட்!
நோ ட்ரெய்லர்ஸ். நேரடியாக மேட்டருக்குப் போகலாம்!
'தசாவதாரம்' நாளை ரிலீஸ். காலை 8.30 மணிக்கே சென்னையில் படம் பார்க்க நீங்க ரெடியா?!
'உள்ளேன் ஐயா' சொன்னால் கச்சேரியை ஆரம்பிக்க நான் தயார்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டு வலைப்பதிவர்களும் ஆஜர் ஆகலாம் போட்டிக்கு. ஆனால் பரிசு கிடைத்தால் யாராவது சென்னைக்காரருக்கு அர்ப்பணித்துவிடவேண்டும்!
என்ன போட்டியை ஆரம்பிக்கலாமா?
புதிய வலைப்பதிவர்களின் கவனத்துக்காக முந்தைய தடாலடிகளில் ஒரு சாம்பிள்: http://gpost.blogspot.com/2006/11/blog-post_18.html
'தசாவதாரம்' நாளை ரிலீஸ். காலை 8.30 மணிக்கே சென்னையில் படம் பார்க்க நீங்க ரெடியா?!
'உள்ளேன் ஐயா' சொன்னால் கச்சேரியை ஆரம்பிக்க நான் தயார்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டு வலைப்பதிவர்களும் ஆஜர் ஆகலாம் போட்டிக்கு. ஆனால் பரிசு கிடைத்தால் யாராவது சென்னைக்காரருக்கு அர்ப்பணித்துவிடவேண்டும்!
என்ன போட்டியை ஆரம்பிக்கலாமா?
புதிய வலைப்பதிவர்களின் கவனத்துக்காக முந்தைய தடாலடிகளில் ஒரு சாம்பிள்: http://gpost.blogspot.com/2006/11/blog-post_18.html
இதுதான் போட்டி..
சூப்பர் ஸ்டாருக்காக பிரத்தியேகமாக படத்தைத் திரையிட்டுக் காட்டினார் உலக நாயகன். தியேட்டரை விட்டு வெளியேறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.
சரி, உங்களுக்கான கேள்வி இதுதான்:
கமலிடம் ரஜினி என்ன சொல்லியிருப்பார்?
ஹலோ... நிஜமாகவே அவர் என்ன சொன்னார் என்பது மீடியாக்களில் செய்தியாக வந்துவிட்டது. ஆனால் நீங்களே உங்களை ரஜினியாக கற்பனை பண்ணிக்கொண்டு ச்சும்மா ஜாலியா ஒரு கமெண்ட் எடுத்து விடுங்களேன் பார்க்கலாம்! குறும்பு கொப்பளிக்கட்டும் உங்கள் கமெண்ட்களில்!!
பிற்சேர்க்கை 1 : பரிசு மொத்தம் மூன்று பேர்களுக்கு வழங்கப்படும் என்ற செய்தியை இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.வெள்ளிக்கிழமை - 13.6.20008 காலை 8.30 மணிக்காட்சி,
சனிக்கிழமை - 14.6.2008 இரவு 10 மணிக்காட்சி,
ஞாயிற்றுக்கிழமை - 15.6.2008 மாலை 6 மணிக்காட்சி
பிற்சேர்க்கை 2 : தடாலடியில் ஒரு கிளையடியாக முதல் கமெண்ட் அடித்த திருவாளர் விக்கி அவர்களுக்கு அவரது வேண்டுகோளுக்கு இணங்க, திருநெல்வேலியில் நாளை மாலை தசாவதாரம் படத்துக்கு மூன்று டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
பிற்சேர்க்கை 3 : பரிசுக்குரிய இருவர் (என்னடா.. ஒருத்தருக்குதான் பரிசுன்னு சொல்லிட்டு ரெண்டு பேருக்கு கொடுக்குறோம்னு பார்க்குறீங்களா? நாங்க சொன்னதையும் செய்வோம்.சொல்லாததையும் செய்வோம்ல.. :-)
//கிரி said... படத்த பற்றி நல்லதா நான் சொல்லலைனா ..என்னை கயிற்றை கட்டி கடல்ல இறக்கிட மாட்டீங்களே :-) கிரி சிங்கப்பூர் ல் இருந்து//
//சிறில் அலெக்ஸ் said... பத்து பேரும் அசினுக்கு முத்தம் குடுக்கிறாப்புல செஞ்சது நல்ல ட்ரிக்.//
கிரி, சிறில் அலெக்ஸ் - சென்னையில் நாளை காலை 8:30க்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நீங்களோ அல்லது உங்களின் சார்பாக உங்கள் நண்பரோ தசாவதாரம் படம் பார்ப்பதற்கு உங்களின் அல்லது உங்கள் நண்பரின் தொலைபேசி எண்ணை உங்களின் ஐடி வழியாக கமெண்ட் மூலம் தெரியப்படுத்தவும். உங்கள் கமெண்டை வெளியிட மாட்டோம். உடனடியாக அவர்களை தொடர்பு கொள்வோம்.
பிற்சேர்க்கை 4 : மக்களா.. போட்டி இன்னும் முடியல.. வெள்ளி காலை 8.30 ஷோவுக்கு மட்டும்தான் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கு. இன்னும் ஆரம்பத்துல சொன்ன மாதிரி மத்த காட்சிகளுக்கு போட்டோ போட்டி மிச்சம் இருக்கு.
ஆட வாங்க அண்ணாத்த..
பிற்சேர்க்கை 5 : வணக்கம் வாத்தியார்களே! நம்ம கிரியோட நண்பர் ஜானியும்
சிறில் அலெக்ஸ் நண்பர் பிரிட்டோவும் இன்று காலை 8.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பரிசு டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்.
அதிகாலை போனஸாக இருவருக்கும் தலா ஒரு டிக்கெட் இன்று இரவுக்காட்சிக்கும் வழங்கப்படுகிறதுங்கோ!
பிற்சேர்க்கை 6 : திரு பிரிட்டோ அவர்கள் காலைக்காட்சியைத் தவறவிட்டதால், 14.6.2008 காலை 11.30 மணிக்காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.
பிற்சேர்க்கை 7 : மேலும் பரிசுக்குரிய மூவர்!
1.சின்னப்பையன்
2.சுப்பையா
3.நாகராஜன்
மூவருக்கும் வாழ்த்துக்கள்!
பிற்சேர்க்கை 8 : சுப்பையா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது சார்பாக பரிசைப் பெற்றுக்கொள்பவர்.. உண்மைத்தமிழன்!சின்னப்பையன் மற்றும் நாகராஜன் எங்கிருந்தாலும் பின்னூட்டத்துக்கு வரவும்..
140 comments:
அது எப்படி நீங்க தடாலடி பண்ணும் போதெல்லாம் நான் ஊருக்கு போறேன். திருநெல்வேலில டிக்கெட் கிடைக்குமா ;)
ரீ என்ட்ரிக்கு வாழ்த்துக்கள் :)
Dasavatharam full movie is available ONLINE. Please click the following link
http://www.tamiltubevid.com/2008/02/dasavatharam-view-online-download.html
ஸ்டார்ட் மியூசிக் :-)
Hi Vicky,
திருநெல்வேலியில் டிக்கெட் தர நான் ரெடி!
எந்த ஷோ?
நீங்க கமல் தானே :-)))) இல்ல படம் பார்த்த பிறகு யாரு கமல் யாரு.. யாரு வேற ன்னு தெரியல ..அது தான் ஒரு உறுதி படுத்துதல் ஹி ஹி ஹி
கிரி சிங்கப்பூர் ல் இருந்து
பரிசு மொத்தம் மூன்று பேர்களுக்கு வழங்கப்படும் என்ற செய்தியை இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
வெள்ளிக்கிழமை - 13.6.20008 காலை 8.30 மணிக்காட்சி,
சனிக்கிழமை - 14.6.2008 இரவு 10 மணிக்காட்சி,
ஞாயிற்றுக்கிழமை - 15.6.2008 மாலை 6 மணிக்காட்சி
தடாலடியில் ஒரு கிளையடியாக முதல் கமெண்ட் அடித்த திருவாளர் விக்கி அவர்களுக்கு அவரது வேண்டுகோளுக்கு இணங்க, திருநெல்வேலியில் நாளை மாலை தசாவதாரம் படத்துக்கு மூன்று டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
//G Gowtham said...
தடாலடியில் ஒரு கிளையடியாக முதல் கமெண்ட் அடித்த திருவாளர் விக்கி அவர்களுக்கு அவரது வேண்டுகோளுக்கு இணங்க, திருநெல்வேலியில் நாளை மாலை தசாவதாரம் படத்துக்கு மூன்று டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!//
சூப்பர்...
சரி.. போட்டியை ஆரம்பிங்க :-)
கமல் நீங்க முன்னாடி தாடி வளர்த்திருக்கீங்க நான் பின்னாடி வளர்த்திருக்கேன்
கமல் நீங்க எப்படி இன்னும் இளமையா இருக்கீங்க.
கமல் : நீஙக பொன்னுக்கு கல்யாணம் செய்து தாத்தா ஆகிட்டீங்க. நான் எனக்கே கல்யாணம் இன்னும் செய்துக்கிட்டிருக்கேன், அதான்.....
நான் வருசா வருசம் கைலாயத்துக்குப் போயிட்டிருக்கேன்.
நீங்க திருவரங்கத்துக்குப் போயிட்டீங்க ..
எப்படியோ நாத்திகத்தை விட்டு எங்க பக்கம் வந்துட்டீங்க.. அதுவரைக்கும் சந்தோசம்...
If you feel my previous comment is Hurting please remove it. Sorry
Its ok Mr.Padippavan! Arasaiyalla ellam sagajamappa
-kamal
50 கோடி செலவு பண்ணா படம் எப்படி வரனும்னு இந்த படத்தை பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேன்...
நல்ல வேளை சிவாஜி அப்ப இந்த படத்தை ரிலிஸ் பண்ணாம என்னை காப்பாத்திட்ட நண்பா...
கமல்,என்னை மாஸ் ஹீரோன்னு எல்லாரும் சொல்றாங்க,ஆனால் நடிப்புல இப்படி மாத்து மாத்துன்னு மாத்துறது நீதானே? நானும் அபூர்வ ராகங்கள்'ள இருந்தே பாக்குறேன்;எப்படின்னு எனக்கும் கொஞ்சம் சொல்லித் தரலாம்ல...
சிங்கப்பூர்ருக்கு 3 டிக்கெட் பையா....நினைவுல இருக்கேனா நான்..
அசினோட பாட்டிக்கு பாவடை தாவணி கட்டினா கூட நல்லா தான் இருக்கும்... இது எப்படி இருக்கு...
இது தான் பிரமாண்டப்படமா ?? என்னை ஷங்கர் நல்லா ஏமாத்திட்டாரு :-)))
கிரி சிங்கப்பூர் ல் இருந்து
டபுல் ஆக்ஷன் படத்துலயே இது தான்பா பெஸ்ட்டு...
//சிங்கப்பூர்ருக்கு 3 டிக்கெட் பையா....நினைவுல இருக்கேனா நான்..//
சீமைக்குப் போயிட்டீங்களா ஐயா?!
எப்படிய்யா நினைக்காம இருக்க முடியும் உங்களையெல்லாம்!
ரெண்டாப்பு படிக்குறப்ப உங்ககிட்ட கடலு கல்லுக்குச்சி வாங்கி சிலேட்டுல படம் வரைஞ்சு நான் அழகு பார்த்ததையும்,
நாலாப்பு படிக்கையில நான் கொடுத்த 'ஆளவந்தார் கொலை வழக்கு' கதைப் புத்தகத்தை நீங்க வாங்கிட்டு உங்க வீட்டுக்குப் போக.. புத்தகத்துல ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்' அப்படின்னு இருந்ததைப் பார்த்த உங்கப்பா ஹெட்மாஸ்டர்கிட்ட வந்து கம்ப்ளெய்ண்ட் பண்ண..
'படவா ராஸ்கோலு'ன்னு ஹெட்மாஸ்டர் என் பின்பக்கம் பிரம்படி போட்டதையும்..
நினைக்காம இருக்க முடியுமா ஐயா!
இந்த படத்துல மல்லிகா ஷெராவத் ஆடின ஆட்டத்த பார்த்து..இனிமேல் இமயமலை எல்லாம் போக கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் :-) என்னை நல் வழிக்கு திருப்பியதற்கு நன்றி !
கிரி சிங்கப்பூர் ல் இருந்து
ரோபோவுக்கு டைரக்டர மாத்தலாம்னு நினைக்கிறேன்
இந்த படத்துல நீ பத்து வேஷத்துல நடிச்சிருக்கறனு மீடியால பேசிக்கிறாங்க நண்பா...
படத்த பற்றி நல்லதா நான் சொல்லலைனா ..என்னை கயிற்றை கட்டி கடல்ல இறக்கிட மாட்டீங்களே :-)
கிரி சிங்கப்பூர் ல் இருந்து
கேசட் ரிலீஸ்க்கு தான் மறந்திட்டீங்க. இப்பவாவது ஞாபகம் வந்ததே
உங்க அடுத்த படம் மர்மயோகின்னு சொன்னாங்களே ...இந்த படமே அப்படி தான் இருக்கு மர்மமா ... யாரு நீங்க யாரு வேறன்னு புரியாம! :-))))
அடுத்து என்ன சதாவதாரமா?
ஏம்பா படையப்பா டைரக்டரா இத எடுத்தது?
அது எப்படிப்பா படத்துல ஜார்ஜ் புஷ்ஷை நடிக்க வச்ச?
நான் அவசரமா இமயமலை போறேன். திரும்பி வர ரொம்ப நாளாகும் போலிருக்கு. அதனால "ரொபோ" படத்தில என்னை மாதிரியே வேஷம் போட்டு எனக்காக நீயே நடிச்சிடன்பா, please, please...
படம் பார்க்க ரவிச்சந்திரன் ஜார்ஜ் புஷ் ஐ சத்யம் திரை அரங்குக்கு கூப்பிட்டு இருப்பதா கேள்வி பட்டேன் :-)))))))))
அடுத்த வாரம் நம்மை மாதிரியே ரவிச்சந்திரன் சிரித்துட்டு இருப்பாரா?
நான் உங்க ஷூட்டிங் பார்க்க வந்த மாதிரி நீங்க ரோபோ ஷூடிங்கிற்க்கு வந்துடாதீங்க.. அப்புறம் ரோபோ ல நீங்க தான் நடித்தீங்கன்னு சொல்லிடுவாங்க :-))))
ஆமா அடுத்ததா எந்த தயாரிப்பாளரை காலி பண்ண போறீங்க ? :-)))
அது சரி நாமெல்லாம் எப்ப இந்த மாதிரி டூயட் சாங் பாடுவதை விட்டுட்டு அமிதாப் மாதிரி வயதுக்கு தகுந்த நடிப்புக்கு போவோம்? :-)))
ஏம்ப்பா ஒரு ரூபா குடுத்தா 10 ரூபாய்க்கு நடிக்கிறத இன்னும் நீ விடலியா?
ஏன் மருமகனுக்கு இது மாதிரி ஒரு படம் கொடேன்
சம்பளத்த வாங்கிட்டீங்கல்ல??? இனி ரவிச்சந்திரன் பாடு ஹா ஹா ஹா
உன்னயப்பார்த்தா எனக்கு பாவமா இருக்கு
தாணுவ கூப்பிடலயா?
இனி ரவிச்சந்திரன் தான் குசேலன்
பேசாம நான் ஜக்குபாயை எடுத்து இருக்கலாம் சிவாஜி எடுத்ததற்கு ......:-))))
திங்க் குளோபலி ஆக்ட் லோக்கலி அப்பத்தான் ஜெயிக்க முடியும் நண்பா
ரவிச்சந்திரன் சிரிச்சுட்டு இருக்காரா ??? ஹா ஹா ஹா
நீ அப்பப்ப வந்தாலும் அப்டேட்டா வருவ இப்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்க
வெளிய தாங்க இப்படி சிரிச்சிட்டு இருக்கேன் :-))))))
இந்த கூழுக்குத்தானா இருபத்தெட்டு நாமம்
ரஜினி: நான் பாட்ஷாவுல செய்த பத்து வேடங்கள விட சூப்பரா இருக்குது
கமல்: !!!
==============
ரஜினி: அடுத்த படத்துல என்னப் போல வேஷம் போட்டு நடிச்சிரமாட்டீங்களே? ஹ.. ஹ.. ஹ
==============
மீதி ஒன்பதுபேர் எங்க?
=============
இராம கோபாலனுக்கு நான் சொல்லிடுறேன்.
==============
பத்து பேரும் அசினுக்கு முத்தம் குடுக்கிறாப்புல செஞ்சது நல்ல ட்ரிக்.
=============
அப்படா எவ்ளோ முடி?!!!
======================
பஞ்ச் சாங் நீயும் வைக்க ஆரம்பிச்சாச்சா (உலகநாயகனே)
அசினா வந்ததும் நீதானா?
ஏம்ப்பா ப்ரீ டிக்கட் குடுத்து ஓட்டற அளவுக்கா ஆயிப்போச்சு
பாபாவவிட தேவல
ஹேராம்ல அடிபட்டுமா இன்னும் திருந்தலை?
இன்னும் சில நிமிடங்களில் நாளை காலை படம் பார்க்கப் போகும் பரிசுக்குரியவர் அறிவிக்கப்படுவார். இரண்டாமவர் நாளை மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுவார். அதுவரை.. கமெண்ட் மழை பொழிந்து தள்ளிக்கொண்டே இருங்கள்!
கலைஞர் டிவி அட்வான்ஸ்ஸ திருப்பி வாங்கிட்டாங்களா அடடே
பரிசுக்குரிய இருவர்
(
என்னடா.. ஒருத்தருக்குதான் பரிசுன்னு சொல்லிட்டு ரெண்டு பேருக்கு கொடுக்குறோம்னு பார்க்குறீங்களா? நாங்க சொன்னதையும் செய்வோம்.சொல்லாததையும் செய்வோம்ல.. :-)
)
//கிரி said...
படத்த பற்றி நல்லதா நான் சொல்லலைனா ..என்னை கயிற்றை கட்டி கடல்ல இறக்கிட மாட்டீங்களே :-)
கிரி சிங்கப்பூர் ல் இருந்து//
//சிறில் அலெக்ஸ் said...
பத்து பேரும் அசினுக்கு முத்தம் குடுக்கிறாப்புல செஞ்சது நல்ல ட்ரிக்.//
கிரி, சிறில் அலெக்ஸ் - சென்னையில் நாளை காலை 8:30க்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நீங்களோ அல்லது உங்களின் சார்பாக உங்கள் நண்பரோ தசாவதாரம் படம் பார்ப்பதற்கு உங்களின் அல்லது உங்கள் நண்பரின் தொலைபேசி எண்ணை உங்களின் ஐடி வழியாக கமெண்ட் மூலம் தெரியப்படுத்தவும்.
உங்கள் கமெண்டை வெளியிட மாட்டோம்.
உடனடியாக அவர்களை தொடர்பு கொள்வோம்.
இதோட ஒரிஜினல் இங்லீஷ் படம் எதுப்பா?
என் பொண்ணு படம் வரதுக்குள்ள படம் ஓடி முடிஞ்சுடும் இல்ல?
மக்களா.. போட்டி இன்னும் முடியல..
வெள்ளி காலை 8.30 ஷோவுக்கு மட்டும்தான் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கு.
இன்னும் ஆரம்பத்துல சொன்ன மாதிரி மத்த காட்சிகளுக்கு போட்டோ போட்டி மிச்சம் இருக்கு.
ஆட வாங்க அண்ணாத்த..
//வெட்டிப்பயல் said...
நல்ல வேளை சிவாஜி அப்ப இந்த படத்தை ரிலிஸ் பண்ணாம என்னை காப்பாத்திட்ட நண்பா...
//
எப்படி வெட்டிப்பயலாரே இப்படியெல்லாம் ஜோக்கடிக்கிறீங்க?!
அப்படியா..
போட்டி இன்னும் இருக்கா?
'எங்க' ஊரிலே ரெண்டு டிக்கெட் கிடைக்குமா? ஹிஹி..
ரஜினி கமலிடம்.. "இப்போ ரெண்டு பேரா நடந்து வரோமே, இது ரெண்டுமே கமல் தான்.. அப்படீன்னு சொன்னா கூட எல்லாரும் நம்பிடுவாங்க பாருங்க!"
ரொம்ப நேரம் அந்த தாத்தாகிட்டே நீன்னு நினெச்சி பேசிக்கிட்டுருந்தேன்.
விவேக்கை சேர்த்திருந்தா அசிங்கமா பேசறாப்பல கொஞ்சம் வசனத்தை போட்டிருக்கலாம்.
"உண்மைய சொல்லுங்க கமல்ஜி... கே.எஸ். ரவிக்குமாரா இவ்வளவு நாளா போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுத்துகிட்டு இருந்ததும் நீங்க தானே?!"
கே.எஸ்.ரவிக்குமார் சும்மா ஜாலிக்குத்தானே?
கமல் ரஜினியிடம்.. "அது எப்படிங்க, நீங்க குசேலன்னு பேரு வெச்சவுடனே அந்தக் காலத்து குசேலரை கிண்டலடிச்சு படம் எடுக்குறீங்கன்னு யாருமே சண்டைக்கு வரல?!"
ம்...உங்க வீட்டுல சன் டி.வி. வருதா?!
அடுத்த படத்திலே நான் ஒரு வேஷம்கூட போடாமெ நடிக்கப்போறேன். எப்படி? புதுமையா இருக்குமா?
ஏம்பா, நீ நிஜமான கமல்தானே?
யாரைப் பாத்தாலும் எனக்கு கமல் மாதிரியே தெரியுது. சார். என்னை கொஞ்சம் அந்தப் பக்கம் கொண்டுபோய் விடறீங்களா?
"மாயவரத்தானுக்கு ஒரு ரெண்டு மூணு டிக்கெட் ஜி போஸ்ட்டில இருந்து கண்டிப்பா கெடச்சிடும்னு நான் சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க கமல்?"
"நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும் ரஜினி!"
அடுத்த வருஷம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த நகைச்சுவை, சிறந்த வில்லன் எல்லாமே உனக்குத்தான்பா.. அதுவும் இந்த ஒரே படத்துக்கே கிடைக்கும்..
பாருங்க ரஜினி..உங்களுக்கு க்ளைமாக்ஸிலே மொட்டை அடிக்கணும்னா கூட ரொம்ப ஈஸி.. ஆனா நான் என்ன தான் கஷ்டப்பட்டாலும் மொட்டை எனக்கு அடிக்க முடில..ப்ரொடியூசர்சுக்கு தான்!
"அந்த நாலாவது சீனிலே ஒரு ஒட்டகச் சிவிங்கி கிராஸ் பண்ணி போச்சே.. அது கூட நீங்க தான்னு பேசிக்கிறாங்களே, உண்மையாவா கமல்ஜி?!"
"நல்லா விசாரிச்சுட்டேன் கமல்ஜி.. விலை குறைப்பெல்லாம் இட்லி வடைக்கு மட்டும் தானாம்!"
"என்னது வர்ற எலெக்சன் போது பத்தாயிரம் வேஷம் போட்டு வோட்டு போடப் போறீங்களா?!"
"நல்ல வேளை.. எங்கே பத்து வேஷத்திலயுமே நீங்க டி.வி. பேட்டியெல்லாம் கொடுக்குறப்போ பேசுற மாதிரி டயலாக் பேசிடுவீங்களோன்னு பயந்திட்டேன்"
கமல் : படம் எப்படி ரஜினி
ரஜினி : ஒரே தமாசு....பாருங்க மூஞ்ச சிரிச்ச மாதிரியே வச்சிருக்கேன்
கமல் : என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே
"அசின் தான் ஹிந்தியிலே பிஸியா இருக்கே, உண்மைய சொல்லுங்க. அசினா வேஷம் கட்டினதும் நீங்க தானே?!"
"ஓசி டிக்கெட் வாங்குற வரைக்கும் மாயவரத்தானும் ச்சின்னப்பையனும் விட மாட்டாய்ங்க போலருக்கே"
ஆளவந்தானுக்கப்புறம் உங்க படம் பார்த்து இப்பதான் ஹேப்பியா பீல் பண்றேன் கமல்........
"உண்மைய சொல்லுங்க கமல், நாலஞ்சு வருஷம் முன்னாடி அமெரிக்காவிலே உங்களை உள்ளே விட மாட்டேன்னு பிரச்னை பண்ணினாங்களே.. அப்போ எந்த வேஷத்திலே போனீங்க?!"
எம்.ஜி.ஆர் 71 வயசுவரைக்கும் அடிச்சு ஆடலியா? கவலைப் பாடதீங்க!
இன்னும் பத்து வருசத்துக்கு நம்ம ரெண்டுபேர்தான்!
rajini: ஹே ஹே ஹே, இந்த மாதிரி ஒரு கதே மட்டும் கெடச்சா, நான் என் டூப்ப நடிக்க வச்சிட்டு, நேரா பாபாஜி ஆசரமத்துல போய் சுண்டகஞ்சி அடிச்சிட்டு என் ஆன்மீகத்தேடல அழகா தொடங்கிருப்பேன். மிஸ் பண்ணிட்டீங்களே கமல்.
எப்டீபா உனக்கு மட்டும் கரெக்டா மாட்றாங்க?
அப்போ தாணு, இப்ப ரவி.
;)
வணக்கம் வாத்தியார்களே!
நம்ம கிரியோட நண்பர் ஜானியும்
சிறில் அலெக்ஸ் நண்பர் பிரிட்டோவும் இன்று காலை 8.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பரிசு டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்.
அதிகாலை போனஸாக இருவருக்கும் தலா ஒரு டிக்கெட் இன்று இரவுக்காட்சிக்கும் வழங்கப்படுகிறதுங்கோ!
சரி, இன்னும் இருக்கே போட்டி! அடிச்சு பட்டைய கிளப்புங்க!!
//வணக்கம் வாத்தியார்களே!
நம்ம கிரியோட நண்பர் ஜானியும்
சிறில் அலெக்ஸ் நண்பர் பிரிட்டோவும் இன்று காலை 8.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பரிசு டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்.
அதிகாலை போனஸாக இருவருக்கும் தலா ஒரு டிக்கெட் இன்று இரவுக்காட்சிக்கும் வழங்கப்படுகிறதுங்கோ!//
யப்பா தப்பிச்சேன்.. கெளதம் நீங்க மட்டும் டிக்கெட் கொடுக்காம எஸ்கேப் ஆகி இருதீங்கன்னா..நான் ஊருக்கு வந்தா விமான நிலையத்துலையே என்னை அடி பின்னி இருப்பாங்க....நான் வேற தூங்கிட்டேன் சிங்கப்பூர் டைம் ல 7 மணிக்கு தான் பார்த்தேன் அங்கே 4.30 ..நல்லா தூங்கிறவனை எழுப்பி இப்படி சொன்னதும் குஷி ஆகிட்டான் ..ஆகா மச்சி நீ சிங்கப்பூர் போயும் இப்படி டிக்கெட் கொடுத்து உதவுறியே நன்றி மாம் னு சொல்லிட்டே டேய்! டிக்கெட் கொடுக்காம கலாச்சேன்னு தெரிஞ்சுது..அப்புறம் இருக்குடி உனக்குன்னு வேற பீதிய கிளப்பிட்டான்.. நல்லவேளை என் மானத்தை காப்பாத்திட்டீங்க.
சரி சிங்கப்பூர் ல எல்லாம் டிக்கெட் கொடுக்க மாட்டீங்களா ...உங்க எல்லையை விரிவு படுத்துங்க கெளதம் ...:-))
கெளதம் ரொம்ப நன்றி. இப்ப தான் அவன் கிட்டே பேசினேன், இரவில் நீங்கள் கொடுக்க போறதா கூறிய டிக்கெட்டையும் அவன் வேண்டுகோளுக்கு இணங்க காலையிலேயே கொடுத்ததாக கூறினான். அவன் மனைவியுடன் செல்வதாக கூறி ரொம்ப சந்தோசபட்டான்.
உங்களோட சேவையை நினைத்து புல்லரித்து விட்டேன்..இப்படி தாறுமாறா ஒருத்தனை அதிகாலையில் சந்தோஷ படுத்திட்டீங்க. உங்களுக்கு என் நன்றிகள் பல.
தொடரட்டும் உங்கள் சேவை.
தலைவர் குசேலன் படத்துக்கும் போட்டி வையுங்க :-)))
வெல்கம் பேக் தடாலடியாரே! :-)
ரஜினி கமலிடம் : ப்ரண்ட் ரோவுலே பார்க்க அந்த காலத்து கமல் மாதிரி இருந்த ஒரு பையன் படம் பார்த்துக்கிட்டிருந்தானே? ம்ம்ம்.. அவன் பேரு தானே லக்கிலுக்? தடாலடிப் போட்டியிலே வின் பண்ணி இந்த ப்ரிவ்யூ ஷோவுக்கு வந்தவன் தானே? அவனை டச்சுலேயே இருக்கச் சொல்லுங்க. ரோபோலே அவனுக்கு ஒரு ரோல் தரமுடியுமான்னு ஷங்கர் கிட்டே பேசுறேன்!
"யப்பா.. பத்து பத்தா பத்தவெச்சிட்டியே சப்பாணி!”
கமல்ஜி! ரோபோவுலே நான் நடிக்கிறதா நிறைய பேரு நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆக்சுவலா என்னை மாதிரியே மேக்கப் போட்டு நீங்க தான் நடிக்கிறீங்கங்கறது நம்ப ரெண்டு பேருக்குள்ளே மட்டும் இருக்குற சீக்ரட்டா இருக்கட்டும். ஷங்கர் கூட நான் தான் ஷூட்டிங்கிக்கு வர்றேன்னு நெனைச்சுக்கிட்டிருக்காரு!
ரஜினி ரகசியமாக கமலிடம், “கமல் சார்! ஆக்சுவலா ரஜினி சார் இப்போ ஊருலே இல்லை, இமயமலைக்கு போயிட்டாரு. எல்லாருக்கும் முன்னாடி படம் பார்க்கணும்னு ரஜினி சார் மாதிரியே மேக்கப் போட்டுக்கிட்டு உள்ளே வந்துட்டேன். என்னோட பேரு தடாலடி கவுதம்”
”க்ரேட்.. க்ரேட்.. படத்துலே கலைஞர்ஜி ரோல் நல்லா பண்ணியிருந்தீங்க. அந்த ஹேர் ஸ்டைல்லே ஸ்க்ரீன்லே கொண்டுவர ஹேர்டிரெஸ்ஸர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாரு!”
”எக்சலண்ட். இன்னொரு முறை படம் பார்க்கணும்னு ஆசைப்படறேன். ஆனா சத்யம், ஐனாக்ஸ், மாயாஜால் எல்லாத்துலேயும் ஒன் வீக் ஹவுஸ் ஃபுல். நோ ப்ராப்ளம். ஜிஜி நடத்தப்போற தடாலடி போட்டியிலே கலந்துக்கிட்டு வின் பண்ணி உட்லண்ட்ஸ்லே பார்த்துக்கறேன்!”
கமல் : ரஜினி ஹவ்ஸ் தி மூவி!
ரஜினி : இப்போ எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா சொல்ல வேண்டிய நேரத்துலே கரெக்டா சொல்லுவேன்
கமல் : படத்துலே என்னோட கேரக்டர்ஸ் பத்தி...
ரஜினி : தமிழ்நாட்டு ரசிகர்களை இந்தப் படம் பார்க்க விடாம ஆண்டவனாலே கூட தடுக்க முடியாது.
கமல் : நீங்க ரோபோவுலே 11 வேஷத்துலே நடிக்கப்போறதா..
ரஜினி : நான் ஒரு வேஷத்துலே நடிச்சாலே அது நூறு வேஷத்துக்கு சமம்
கமல் (எரிச்சலோடு) : என்னதான் படத்தைப் பத்தி சொல்றீங்க?
ரஜினி : கண்ணா! இச்சக்கான்னா இச்சக்கா.. அச்சக்கான்னா அச்சக்கா.. ஹவ்ஸ் இட்?
கமல் தெரித்து ஓடுகிறார்.
நான் அவசரமா என் பொண்ணு படத்துக்காக அமெரிக்கா போக வேண்டி இருக்கு. எனக்காக நீங்க "குசேலன்" ல கொஞ்சம் நடிச்சுட முடியுமா ?
கே ஆர் பி
இன்னைக்கே படம் பார்க்கணும்னு நெனைக்கிறவங்க சீக்கிரமா கமெண்டுகளை கொட்டுங்க. சீக்கிரம். நேரம் ஓடிக்கிட்டேயிருக்கு!
கமல்ஜி !
போன முறை நான் "சிவாஜி" பேரை வைச்சேன். நீங்க ("சிவாஜி" நடித்தது போல) ஒன்பதை விட அதிகமா நடிச்சுட்டீங்க.
என்னால இது போல நடிக்க முடியாது.
வேணும்னா இந்த முறை நீங்க "எம் ஜி ஆர்" பேரை வைச்சுருங்க. நான்("எம் ஜி ஆர்" நடித்தது போல) ஒன்பதை விட அதிகமான கதாநாயகிளோட நடிச்சுடறேன்
---நெல்லை பிரகாஷ்
//நம்ம கிரியோட நண்பர் ஜானியும்
சிறில் அலெக்ஸ் நண்பர் பிரிட்டோவும் இன்று காலை 8.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பரிசு டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்.
அதிகாலை போனஸாக இருவருக்கும் தலா ஒரு டிக்கெட் இன்று இரவுக்காட்சிக்கும் வழங்கப்படுகிறதுங்கோ!//
திரு.பிரிட்டோ இன்று காலைக் காட்சியைத் தவறவிட்டதால், அவருக்கு இரவுக் காட்சிக்கான டிக்கெட் மட்டும் வழங்கப்படுகிறது!
எப்பய்யா கெடா வெட்டுவீங்க?
இந்த படம் வந்தா தமிழ் திரையுலகின் கதையே மாறிடும்னு சொன்னீங்க கமல்ஜி.. ஆனா படம் வர்றதுக்கு முன்னாடியே ரவிச்சந்திரன் கம்பெனியோட பேரையே மாத்த வெச்சிட்டீங்களே.
இப்போ(வும்) ராகவேந்திரரைதான் கும்பிட்டுட்டு இருக்கீங்களா ரஜினி?!
Rajini: Dasavatharam pazhaya padain Preview arrange panna mudiyuma ?
Kamal: Pazhaya Marmayogi vendumendral arrange panniren..
கண்ணா என் படம் முடிஞ்சதும் நான் திருப்பதி போவேன்...
ஆனா உன் படம் முடிஞ்சா producer பழனிக்கு போராறே....
கமல் ரஜினியிடம்....
இந்த படத்தின் திரைக்கதையை நான் அமைத்தேன் என சொல்லிக்கொள்ளும் பெருமை எனக்கு உண்டு என சொல்லிகொல்வதில் நான் பெருமை படுகிறேன்...
மர்மயோகி படத்துல எதாவது தாத்தா வேஷம் இருந்தா சொல்லுங்க...for a change நான் ஒரு படத்துல make up போடாம நடிக்கிறேன்...
கௌதம்...எல்லாரும் அவங்க ஊர்ல படத்துக்கு டிக்கெட் கொடுக்கறிங்க....எனக்கு டிக்கெட் எல்லாம் வேண்டாம்...எனக்கு ஜஸ்ட் டோக்கியோ ல படத்தை ரிலீஸ் பண்ணுங்க போதும் :)
கமல்ஜி உங்க ஒரு வார friend jackie chan கிட்ட சொல்லி என் close friend அருணுக்காக படத்தை japan ல ரிலீஸ் பண்ண சொல்லுங்க
Rajini: Kamalji pazaya dasavatharam preview arrange panna mudiyuma??
Kamal: Rajiniji, pazaya Marmayogi vendumendral arrange pannren.
//கண்ணா! a.v.m.சரவணன் சாரை பார்க்கலாம்னு வந்தா பக்கத்து தியேட்டரில் இருந்து வந்து இப்படி இழுத்துட்டுப் போறது ...நல்லாயில்லே!
//கவலைப்படாதே கண்ணா! கையை விடு...இப்ப்ப ஓட மாட்டேன்!!
//கமல் (மனதில்): இப்படி கூட்டம் தான் சேர்த்தான் உண்டு போலே!
//சீக்கிரமா படம் போடுங்க கமல்ஜி !!பக்கத்திலே ஒரு உண்ணாவிரதம் இருக்கு தலைமை தாங்கப் போகபோகணும்.
//நீயா கையை விட்டா இண்டெர்வல் வரை பார்ப்பேன்!! நானா உருவிட்டு ஓடினா டைட்டில் சாங் வரை தான்..முடிவு செஞ்சுக்க.பாபா கவுண்ட் டவுண் ஸ்டார்ட்......
லதா வைய்யும், சத்யத்துக்கு போவனும், டிக்கட் கொடு கமல்...
(எனக்கு சன்டே ஈவினிங் ஷோ போதும் கௌதம் சார் :-))
இதுவரை
முன் வரிசையில் நிற்கும் கமெண்ட்ஸ்.. இதோ..
முடிவுகள் நாளை காலை அறிவிக்கப்படும்
----------------------------------
வெட்டிப்பயல் said...
அசினோட பாட்டிக்கு பாவடை தாவணி கட்டினா கூட நல்லா தான் இருக்கும்... இது எப்படி இருக்கு...
---------------------------------
முரளிகண்ணன் said...
ஏம்ப்பா ஒரு ரூபா குடுத்தா 10 ரூபாய்க்கு நடிக்கிறத இன்னும் நீ விடலியா?
---------------------------------
ச்சின்னப் பையன் said...
யாரைப் பாத்தாலும் எனக்கு கமல் மாதிரியே தெரியுது. சார். என்னை கொஞ்சம் அந்தப் பக்கம் கொண்டுபோய் விடறீங்களா?
---------------------------------
ச்சின்னப் பையன் said...
அடுத்த படத்திலே நான் ஒரு வேஷம்கூட போடாமெ நடிக்கப்போறேன். எப்படி? புதுமையா இருக்குமா?
---------------------------------
SP.VR. SUBBIAH said...
எம்.ஜி.ஆர் 71 வயசுவரைக்கும் அடிச்சு ஆடலியா? கவலைப் பாடதீங்க!
இன்னும் பத்து வருசத்துக்கு நம்ம ரெண்டுபேர்தான்!
---------------------------------
லக்கிலுக் said...
கமல் : ரஜினி ஹவ்ஸ் தி மூவி!
ரஜினி : இப்போ எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா சொல்ல வேண்டிய நேரத்துலே கரெக்டா சொல்லுவேன்
கமல் : படத்துலே என்னோட கேரக்டர்ஸ் பத்தி...
ரஜினி : தமிழ்நாட்டு ரசிகர்களை இந்தப் படம் பார்க்க விடாம ஆண்டவனாலே கூட தடுக்க முடியாது.
கமல் : நீங்க ரோபோவுலே 11 வேஷத்துலே நடிக்கப்போறதா..
ரஜினி : நான் ஒரு வேஷத்துலே நடிச்சாலே அது நூறு வேஷத்துக்கு சமம்
கமல் (எரிச்சலோடு) : என்னதான் படத்தைப் பத்தி சொல்றீங்க?
ரஜினி : கண்ணா! இச்சக்கான்னா இச்சக்கா.. அச்சக்கான்னா அச்சக்கா.. ஹவ்ஸ் இட்?
கமல் தெரித்து ஓடுகிறார்.
----------------------------------
KRP said...
நான் அவசரமா என் பொண்ணு படத்துக்காக அமெரிக்கா போக வேண்டி இருக்கு. எனக்காக நீங்க "குசேலன்" ல கொஞ்சம் நடிச்சுட முடியுமா ?
கே ஆர் பி
----------------------------------
மாயவரத்தான்... said...
இந்த படம் வந்தா தமிழ் திரையுலகின் கதையே மாறிடும்னு சொன்னீங்க கமல்ஜி.. ஆனா படம் வர்றதுக்கு முன்னாடியே ரவிச்சந்திரன் கம்பெனியோட பேரையே மாத்த வெச்சிட்டீங்களே.
-----------------------------------
லக்கிலுக் படம் பாத்துட்டு விமரிசனமும் போட்டுட்டாரு. எனவே அவரை ஆட்டத்திலிருந்து விலக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஹிஹி
ரஜினி கமலிடம்..
பூவராகவன் கேரக்டரைக் கொண்டு வந்து திருமாவளவனை சமாளிச்சிட்டீங்க.
ம்ம்.. சங்கர் கிட்ட சொல்லி ராமதாசுக்கு ஒண்ணு ரெடி பண்ண சொல்லணும்.
பரிசுக்குரிய மூவர்!
1.சின்னப்பையன்
2.சுப்பையா
3.நாகராஜன்
மூவருக்கும் வாழ்த்துக்கள்!
சுப்பையா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது சார்பாக பரிசைப் பெற்றுக்கொள்பவர்.. உண்மைத்தமிழன்!
சின்னப்பையன் மற்றும் நாகராஜன் எங்கிருந்தாலும் பின்னூட்டத்துக்கு வரவும்..
தடாலடியின் உச்சகட்டமாக ஒரு அதிரடி அறிவிப்பு!
சூப்பர் ஸ்டாரின் ‘குசேலன்' படத்தை முதல் நாள் பார்க்க ரெடியா?
விவரம் இன்னும் சில நிமிடங்களில்...
Friday / Saturday OK.
What about Sunday show?
KRP
ரஜினி கமலிடம்
மூன்று முகம் பண்ணியிருக்கேன். ஆறிலிருந்து அறுபது வரை பண்ணியிருக்கேன். பட் .. தஸாவதார் .. வாவ் பின்னிட்டப்பா வாவ்
btw டிக்கெட்டுக்கு நன்றி :)
கே.எஸ்.நாகராஜுக்கு பரிசு கிடைச்சது ரொம்ப அநியாயம் :-) அதுவும் வாராவாரம் வேறு அவர் கமெண்டு போட்டு ஒரு படடிக்கெட் வாங்குவேன் என்று மார் தட்டிக் கொள்கிறார். கிரிக்கெட் மாதிரி இதிலும் ஏதோ பெட்டிங்ஸ் நடக்குதா? :-)))))
அடுத்ததாக அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு ப்ராக்ஸி முறையில் வெற்றி கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள். டிக்கெட் வாங்கி அவர் படம் பார்த்து மகிழ்ந்திருப்பார் என்று நம்புகிறேன்.
சீக்கிரமாக குசேலன் போட்டியை ஆரம்பியுங்கள். கோதாவில் குதிக்க தயாராக இருக்கிறோம்.
நாகராஜன் அண்ணனுக்கு பரிசா? எனக்கு ஏதோ இது 'நமக்கு நாமே' திட்டம் போல தெரியுதே! (பரிசு கிடைக்காத வவுத்தெரிச்சல்!)
மாயூரம் சார்! நீங்களோ ரஜினி சாரின் தீவிர வி.அ.கு. உங்களுக்கு எதுக்கு கமல் படத்து டிக்கெட்டு? அப்படி பரிசு விழுந்திருந்தாலும் எனக்கு கொடுத்துட்டிருப்பீங்க இல்லையா? :-)
மற்றபடி நாகராஜ் சார் யார் எவர் என்று புலன்விசாரணை நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.
படமே ஊத்திக்கிச்சு. எனக்கு இனி டிக்கட் கிடச்சா என்ன? கிடைக்காட்டி என்ன?. ( இது போட்டிக்கு இல்லை எனக்கு)
ஆஹா.. வந்துட்டேன்.. ஐயா.. சொல்லுங்க.. சொல்லுங்க..
குசேலன் மட்டும் என்ன உலக சரித்திரத்த மாத்திரவா போகுது? அட போங்க சார். அதுக்கு முதல்நாள் டிக்கட் வேற.
குசேலன் தடாலடி!!
போட்டிக்கான புகைப்படம் அதேதான். இடம், பொருள், சூழல்.. எதை வேண்டுமாலும் மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், ரஜினியிடம் கமல் என்ன பேசுவார் என ‘மாத்தி யோசி'க்க வேண்டும்!
அம்புட்டுதான் போட்டி!
ஜாலியாக யோசியுங்கள். ஆனால் சீரியஸாக போட்டியில் கலந்து கொள்ளுங்கள். பரிசு பரம சீரியஸ்!
சொன்ன மாதிரியே ‘குசேலன்' படம் ரிலீஸாகும் அன்று தடாலடி டிக்கெட் தர நான் ரெடி. மொத்தம் மூன்று பேருக்குப் பரிசு தரலாம் என இப்போதைக்கு முடிவெடுத்திருக்கிறேன். நாளை நடப்பதை நானறியேன்! :-)
அதேபோல குசேலனைப் பார்க்கும் வாய்ப்பை சென்னை அல்லது கோவை அல்லது நெல்லையில் வழங்கலாம் எனவும் முடிவெடுத்துள்ளேன். எந்த ஊரில் படம் பார்க்கலாம் என வெற்றியாளரே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
கமலாக உருமாறி களமிறங்குங்கள். குசேலனை வெல்லுங்கள்.
போட்டிக்கான டெட்லைனையும் அறிவித்து விடுங்கள். ஹோம் ஒர்க் செய்ய வசதியாக இருக்கும்!
கமல் ரஜினியிடம் .....
நாம ரெண்டு பெரும் மறுபடியும் இணைந்து நடிக்கிற படத்திலே கண்டிப்பா இந்த மாதிரி ரிஸ்க் எதுவும் எடுக்க மாட்டேன். நம்புங்க ப்ளீஸ் ....
அன்புடன்
கே ஆர் பி
குசேலரோட மனைவி சுசீலை'ன்னு ஒரு ரோலைப் போட்டு எனக்குச் சான்ஸ் கொடுத்திருந்தீங்கன்னா பிச்சிருக்கலாமே! ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து நடிச்ச மாதிரியும் இருந்திருக்குமே!
லக்கியாரே.. உண்மை தான். ஆனா டிக்கெட்டை உமக்கு கொடுத்திருப்பேனா இல்லையான்னு தெரியாது. நீர் (தி)மு.க. தலைவரின் கு.வி.கு. ஆச்சே. அதனால அரை மணி நேரம் மட்டுமே இந்தப் படத்தை பார்த்து விட்டு அடுத்த நாள் ஆஸ்பத்திரியிலே போய் படுத்துக்கிட்டீங்கன்னா பழி என் மேல இல்லே விழும்?! ஹிஹி
மற்றபடி நாகராஜன் யார் என்பது குறித்த விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி வசம் விடவும். அவர்கள் தான் நாகராஜன் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று ஒரு கதையை கொண்டு வருவார்கள்.
கு.வி.கு.கு. என்றால் என்ன என்பது குறித்து லக்கியாரிடம் கேட்கவும். எனக்கு மின்னஞ்சல் எல்லாம் அனுப்ப வேண்டாம்.
கெளதம்ஜி.. குசேலர் பட போட்டியை தனியாக அறிவிக்கவும். இங்கே வேண்டாம்.
தசாவதாரம் பார்த்து விட்டு வந்த ரஜினி கமலிடம்: "அடப்பாவி, இப்படி ஒரு மொக்க படத்த எடுத்திட்டு எப்படிய்யா கமெண்ட் வேற கேக்குறீங்க?"
குசேலன் படத்துக்கு குபீட் டிக்கெட் போட்டிக்கான கமெண்ட்ஸ் மட்டுமே இனி வரவேற்கப்படுகின்றன!
லக்கிலுக்,
போட்டிக்கான கெடுவினை இப்போதே தீர்மானிக்க வேண்டாம் எனக்கருதுகிறேன். முதலில் படத்தை எடுத்து முடிக்கட்டும்ப்பா!
What happened to Kuselan contest?!
Post a Comment