நாளைக்கு ராவணன் ரிலீஸ். ‘அய்யா.. தடாலடி போட்டிய மறுபடியும் ஆரம்பிங்கய்யா’ என அன்போடும், ‘அடேய்.. ஆரம்பிடா மறுபடியும்’ என ‘அன்போடும்’ நண்பர்கள் பலரும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இதோ.. வந்தாச்சு மறுபடியும் வலையுலக தடாலடி போட்டி!
படத்தைப்பாருங்கள். ரசியுங்கள். படத்துக்கு பொருத்தமான க்யூட் கமெண்ட்டை எழுதி பின்னூட்டத்தில் அனுப்பி வையுங்கள்.
இந்திய நேரப்படி நாளை - 18.6.2010 காலை 11 மணி வரை போட்டிக்கான கமெண்ட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும். 11.30 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.
2 பேர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாளை பகல் 1 மணிக்கு (FIRST DAY, FIRST SHOW) அல்லது மாலை 4 மணிக்கு அல்லது இரவு 7 மணிக்கு அல்லது இரவு 10 மணிக்கு (வெற்றியாளர்களின் விருப்பத்திற்கேற்ப) சொகுசு தியேட்டரில் ராவணன் படம் பார்க்க டிக்கெட் வழங்கப்படும்!
சென்னையில் மட்டுமே படம் பார்க்க வாய்ப்பு. அதற்காக மற்ற ஊர்க்காரர்கள் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்பதல்ல. வெளியூர் / வெளிநாட்டுக்காரர்களுக்கு பரிசு கிடைக்க நேர்ந்தால், தங்கள் சார்பாக இங்கே சென்னையில் பரிசை அனுபவிக்க வேறு ஒரு நபரை வெற்றியாளரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் எத்தனை கமெண்ட்டுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். என்ன நண்பர்களே.. ரெடியா?
படத்துக்காக நன்றி: SIVA RATNASINGAM
பிற்சேர்க்கை 1
நண்பர் நாகராஜன் தானும் ஒரு டிக்கெட்டை ஸ்பான்சர் பண்ணுவதாக (டிக்கெட்டுக்கு பணம் தருவாராம், நான் முட்டி மோதி டிக்கெட்டை வாங்கி, அதை பரிசா கொடுத்துடணுமாம்!உட்கார்ந்து யோசிக்கிறாய்ங்க பாருங்க!) ஆசைப்படுவதால்.. மொத்தம் 3 பேர் பரிசுக்குரியவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்!
வாங்க வாங்க.. பரிசை வாங்க!
பிற்சேர்க்கை 2
ஜி போஸ்ட் டுக்கு முதல் முறையாக வந்திருக்கும் புதியவர்கள் கவனத்துக்கு.. 'அந்தக்காலத்தில்’ ஜி போஸ்ட் நடத்திய ஒரு தடாலடி போட்டி இங்கே சாம்ப்பிளுக்காக!
http://gpost.blogspot.com/2006/12/blog-post_116550079569670371.html
பிற்சேர்க்கை 3
முதல் காட்சி பகல் 1 மணிக்குத்தான் என்பதால் போட்டிக்கான நேரத்தை காலை 11 மணிவரை நீட்டித்திருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. கலந்துக்க நினைச்சு கலந்துக்காம போனவங்கள்லாம் கட்டாயம் கலந்துக்கங்க!
போட்டிக்கான முடிவுகளை அறிவிக்க யாரையாவது (வலைப்பதிவர்) துணைக்குக் கூப்பிடலாம்னு நினைக்கிறேன்.. நல்ல நாட்டாமையை யாராச்சும் முன்மொழியுங்களேன்..
பிற்சேர்க்கை 4
போட்டிக்கான துணைப்போட்டி முடிவடைய இன்னும் நேரம் இருக்கிறது. மாலை 5 மணி என சொல்லி இருக்கிறார் பரிசு பெற்றவர்களில் ஒருவரான ச.சங்கர். அவரது பின்னூட்டத்தைப் பார்க்கவும். உங்கள் பின்னூட்டங்களைத் தொடரவும்.

44 comments:
நாய்த்தாய் :)
அம்மணி, உடம்பு இளைக்க டாக்டர் நாயைக் கூட்டிகிட்டு வாக்கிங் போகச்சொன்னார்ன்னா, இப்படி இல்ல ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
நாய்த்தாய் :)
ஊரார் நாயை தூக்கி வளர்த்தால் தம் பிள்ளை தாமே நடக்கும். (ஹிஹி)
"அம்மா... அப்பாவ யாரும்மா இப்படி நாயா மாத்தினா?"
:(
அமீரகத்தில் இருப்பதால் நான் இந்தப் போட்டியை புறக்கணிக்கின்றேன்.
வேரெவர் யூ கோன்னு தலைலே கட்டிட்டாங்க. இப்ப தூக்கிகிட்டு அலைய வேண்டியதா இருக்கு
நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்களே (தோளின்) 'மேல்'.
"இங்க பார்ரா கொடுமையை. பொண்ணு பெரு ஜிம்மியாம். நாய் பேரு அபிதகுஜலாம்பாளாம்"
"அம்மா இந்த நாய் மேலா ஃபீமேலா?"
"மேல்" டாக்மா"
மகள் : “அம்மா! அப்பா அடிக்கடி ‘நாய் படுற பாடு’ன்னு சொல்வாரே? அது இதுதானாம்மா?”
நாய்(ன்)சென்ஸ்
பிற்சேர்க்கை 1
நண்பர் நாகராஜன் தானும் ஒரு டிக்கெட்டை ஸ்பான்சர் பண்ணுவதாக (டிக்கெட்டுக்கு பணம் தருவாராம், நான் முட்டி மோதி டிக்கெட்டை வாங்கி, அதை பரிசா கொடுத்துடணுமாம்!உட்கார்ந்து யோசிக்கிறாய்ங்க பாருங்க!) ஆசைப்படுவதால்.. மொத்தம் 3 பேர் பரிசுக்குரியவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்!
வாங்க வாங்க.. பரிசை வாங்க!
பிற்சேர்க்கை 2
ஜி போஸ்ட் டுக்கு முதல் முறையாக வந்திருக்கும் புதியவர்கள் கவனத்துக்கு.. 'அந்தக்காலத்தில்’ ஜி போஸ்ட் நடத்திய ஒரு தடாலடி போட்டி இங்கே சாம்ப்பிளுக்காக!
http://gpost.blogspot.com/2006/12/blog-post_116550079569670371.html
அண்ணன்..
போட்டியில் கலந்துகொள்ளும் திறமை இல்லாததால்.. வெற்றி பெறப்போகிறவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கிறேன்.
:)))
அவசரத்துல இடம் மாறிப்போச்சுன்னு இப்பவே சொல்லலாமா இல்லை கிடைச்சது சான்ஸுனு சும்மா இருந்துறலாமா ?
பாப்பா : அம்மா, இனிமே வீட்ல திருடன் வந்தா நாந்தான் கொலைக்கணுமா ?
ரோட்ல வாலாட்டாம வா, இல்லைனா நடக்க விடமாட்டேன் அப்படீன்னு அம்மா சொன்னது எனக்கு மட்டும்தான்னு நெனச்சியா?
குழந்தை > தாயில்லாமல் நானில்லை
தாய் > நாயில்லாமல் நானில்லை
வெள்ளை நிறமும் தோளில் சவாரி செய்வதும் உடன்பிறந்தவை .
குழந்தை நாயை பார்த்து:
ஓவர் பில்ட் அப் குடுக்காத, இதுக்கு முன்னாடி அந்த இடத்தில நான் தான் இருந்தேன். இப்போ என்னோட நிலைமைய பார்தல ..
தம்பி வினையூக்கிக்கு பரிசு கிடைத்தால் அதனை மறக்காமல் என்னிடம் கொடுத்துவிடவும்..!
தம்பி இப்போதே புக் செய்துவிட்டேன்..!
"ஏம்மா, இந்த நாயைப் போய் இருபதாயிரம் கொடுத்து ஏலத்துல எடுத்தீங்க?"
"அந்த சாமியாரை சுடும் போது இது குறுக்கே போய் காப்பாத்துச்சாம். தெய்வாம்சம் உள்ள நாய்ம்மா"
(இதைக் கேட்டுக் கொண்டே பின்னால் வரும் ஒருவர்)
"அது சரி. அவரு எந்த நாயச் சுட்டாருன்ற விஷயமே இன்னும் சரியா தெரியல. அதுக்குள்ள இந்த புரளியா?"
அந்தம்மா புருசன் தொந்தரவு தாங்காம எவனோ ஒரு மந்திரவாதி கிட்ட போயி புருசன நாயா மாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க, என்ன சரியா?
பெண் குழந்தையிடம்
செல்லம் பப்பிக்கு அடிபட்டிருக்குல் அதனால இன்னிக்கு மம்மி அத தூக்கிட்டு வறேன், நீ மம்மி கைய பிடிச்சு பாத்து நடந்து வாம்மா. குட் கேர்ள்....
கொஞ்சம் மனித நேயத்தோட இருங்கப்பா.. என்னமோ அந்த அம்மாவ கும்முறீங்க... உங்க வீட்டுல நாய் வளர்த்து அதுக்கு உடம்பு சரியில்லாம போயி அத தூக்கிட்டு அசுபத்திரிக்கு அலையும் போது தெரியும்.
எனக்குப் பரிசு கிடைத்தால் எங்கள் அண்ணன் உண்மைத்தமிழனுக்குக் கொடுத்து விடவும்
பிற்சேர்க்கை 3
முதல் காட்சி பகல் 1 மணிக்குத்தான் என்பதால் போட்டிக்கான நேரத்தை காலை 11 மணிவரை நீட்டித்திருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. கலந்துக்க நினைச்சு கலந்துக்காம போனவங்கள்லாம் கட்டாயம் கலந்துக்கங்க!
போட்டிக்கான முடிவுகளை அறிவிக்க யாரையாவது (வலைப்பதிவர்) துணைக்குக் கூப்பிடலாம்னு நினைக்கிறேன்.. நல்ல நாட்டாமையை யாராச்சும் முன்மொழியுங்களேன்.
///நல்ல நாட்டாமையை யாராச்சும் முன்மொழியுங்களேன்.///
பிளீல் கான்டாக்ட் டபிள்யூடபிள்யூடபிள்யூ வினவு டாட் காம்
இந்த 6 கமெண்ட்டுகளில் இருந்து பரிசுக்குரிய 3 ஐ மட்டும் தேர்ந்தெடுக்கணும். யாராச்சும் உதவிக்கு வாரீகளா?
கென்., said...
நாய்த்தாய் :)
6:43 PM
nchokkan said...
2581&postID=6146417529863733490" \o "\"Delete Comment\" nchokkan said...
அம்மணி, உடம்பு இளைக்க டாக்டர் நாயைக் கூட்டிகிட்டு வாக்கிங் போகச்சொன்னார்ன்னா, இப்படி இல்ல ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
6:44 PM
சுரேஷ் கண்ணன் said...
ஊரார் நாயை தூக்கி வளர்த்தால் தம் பிள்ளை தாமே நடக்கும். (ஹிஹி)
6:47 PM
ச.சங்கர் said...
அவசரத்துல இடம் மாறிப்போச்சுன்னு இப்பவே சொல்லலாமா இல்லை கிடைச்சது சான்ஸுனு சும்மா இருந்துறலாமா ?
7:45 PM
ச.சங்கர் said...
ரோட்ல வாலாட்டாம வா, இல்லைனா நடக்க விடமாட்டேன் அப்படீன்னு அம்மா சொன்னது எனக்கு மட்டும்தான்னு நெனச்சியா?
7:53 PM
வினையூக்கி said...
குழந்தை > தாயில்லாமல் நானில்லை
தாய் > நாயில்லாமல் நானில்லை
7:58 PM
ஆறு இப்போ அஞ்சாச்சு!
கென்., said...
நாய்த்தாய் :)
nchokkan said...
அம்மணி, உடம்பு இளைக்க டாக்டர் நாயைக் கூட்டிகிட்டு வாக்கிங் போகச்சொன்னார்ன்னா, இப்படி இல்ல ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
சுரேஷ் கண்ணன் said...
ஊரார் நாயை தூக்கி வளர்த்தால் தம் பிள்ளை தாமே நடக்கும். (ஹிஹி)
ச.சங்கர் said...
அவசரத்துல இடம் மாறிப்போச்சுன்னு இப்பவே சொல்லலாமா இல்லை கிடைச்சது சான்ஸுனு சும்மா இருந்துறலாமா ?
வினையூக்கி said...
குழந்தை > தாயில்லாமல் நானில்லை
தாய் > நாயில்லாமல் நானில்லை
ரோட்ல வாலாட்டாம வா,
இல்லைனா நடக்க விடமாட்டேன் அப்படீன்னு அம்மா சொன்னது
எனக்கு மட்டும்தான்ன....
குட்லக் சங்கர்
ஆறு இப்போ அஞ்சாச்சு!
கென்., said...
நாய்த்தாய் :)
nchokkan said...
அம்மணி, உடம்பு இளைக்க டாக்டர் நாயைக் கூட்டிகிட்டு வாக்கிங் போகச்சொன்னார்ன்னா, இப்படி இல்ல ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
சுரேஷ் கண்ணன் said...
ஊரார் நாயை தூக்கி வளர்த்தால் தம் பிள்ளை தாமே நடக்கும். (ஹிஹி)
ச.சங்கர் said...
அவசரத்துல இடம் மாறிப்போச்சுன்னு இப்பவே சொல்லலாமா இல்லை கிடைச்சது சான்ஸுனு சும்மா இருந்துறலாமா ?
வினையூக்கி said...
குழந்தை > தாயில்லாமல் நானில்லை
தாய் > நாயில்லாமல் நானில்லை
அஞ்சு இப்போ நாலாச்சு!

போட்டிக்கான (பார்ட் பே) ஸ்பான்சர் நாகராஜன் அவர்களை இறுதி அறிவிப்புக்கு அழைக்கிறேன்.
ப்ளீஸ்.. கம் ஆன் ஸ்டேஜ்!
சட்னு மூணு பேரை தேர்ந்தெடும்!
சென்னை - புதிதாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் அபிராமியின் சொகுசு தியேட்டரில் பகல் 1 மணிக்கு ஷோ!
இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர்:
1) என்.சொக்கன்
2) சுரேஷ் கண்ணன்
3) ச.சங்கர்
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்!
1) என்.சொக்கன்
2) சுரேஷ் கண்ணன்
3) ச.சங்கர்
முதல் நாள் - முதல் காட்சி பகல் 1 மணிக்கு அபிராமியின் சொகுசு தியேட்டரில்.
நேரடியாக தியேட்டருக்கு வந்தால் போதும்.
உடனடியாக என் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
97899 77899
வெற்றியாளர்களோ அவர்கள்து பிரதிநிதிகளோ இன்னும் பத்து நிமிடங்களில் என்னைத் தொடர்புகொண்டால் சொகுசு சேரில் (படம் பார்க்குறப்ப 3 தடவை மசாஜ் பண்ணிவிடுமாம்!) பகல் 1 மணிக்கு படம் பார்க்க பரிசு வழங்கப்படும்.
இதைவிட்டால்..
மாலை 7 மணிக்கு. ஆனால் அப்போது மசாஜ் சேருக்கு உத்தரவாதம் கிடையாதாம்!
சொக்கன் அவர்களின் பிரதிநிதியாக உண்மைத்தமிழன் இப்போது படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்! இன்று நள்ளிரவே அவர் விமரிசனம் எழுதித் தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது!!
மற்ற வெற்றியாளர்கள் இன்னும் தொடர்பு எல்லைக்கு அப்பாலயே இருக்கிறார்கள்..
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அட நான் செமிபைனல்ஸ் வரைக்கும் வந்திருக்கேன்...
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
உண்மைத்தமிழன் அண்ணன் சீக்கிரம் விமர்சனம் எழுதவும்
அன்பு நண்பர் கெளதம், மற்றும் உங்கள் குழுவினருக்கு,
அலுவலக விஷயமாக வெளியில் சுற்றி விட்டு இப்போதுதான் இணைய தொடர்பு எல்லைக்குள் வந்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்
ஆஹா! எனக்கு பரிசா?
என்னுடைய கமெண்ட்டை தேர்ந்தெடுத்தற்கு நன்றி. இது போன்ற ஆரோக்கியமான போட்டிகளை அவ்வப்போது தொடரவும்.
பரிசு பெற்ற / பங்கு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும்.
எனது பின்னூட்டத்தை பரிசுக்கு தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி
சொக்கனுக்கும்,சுரேஷ் கண்ணனுக்கும் வாழ்த்துக்கள்
நான் இன்று இரவு மதுரை செல்கிற படியால் என்னால் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி ராவணன் படம் செல்ல இயலாது,
எனவே 7 மணி ஷோவுக்கு இன்னும் நிறைய நேரமிருப்பதால் இதே போட்டியை இன்னும் சிறிது நீட்டித்து இப்பொழுது முதல் 5 மணி வரை வரும் பின்னூட்டங்களில் சிறந்த பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்து அந்தப் பின்னூட்டம் இட்டவருக்கும் பரிசுக்குறிய டிக்கட்டை வழங்கி ராவணன் 7 மணி ஷோவுக்கு கெளதம் அவர்களை அழைத்துச் செல்லும் படி கேட்டுக் கொள்கிறேன்.
மக்களே.. புகுந்து விளையாடுங்க..5.00 மணி வரை இப்போது அவகாசம் இருக்கிறது...
ஸ்டார்ட் மீஜிக் :))
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
//அலுவலக விஷயமாக வெளியில் சுற்றி விட்டு இப்போதுதான் இணைய தொடர்பு எல்லைக்குள் வந்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்
என்னுடைய கமெண்ட்டை தேர்ந்தெடுத்தற்கு நன்றி. இது போன்ற ஆரோக்கியமான போட்டிகளை அவ்வப்போது தொடரவும்.
உங்களிடம் ஓர் வேண்டுகோள். தொலைபேசியில் சொன்னதுதான். என்னால் இன்று திரைப்படத்தை காண வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதால் என்னுடைய நண்பரை என் சார்பாக அனுப்புகிறேன். அவரிடம் அனுமதி்ச் சீட்டை தந்து படம் பார்க்க உதவவும்.
அவருடைய பெயர் செல்வமணி. மொபைல் நம்பர்....
உங்களின் மொபைல் எண்ணையும் அவரிடம் தந்திருக்கிறேன். இன்று (18.06.2010) மாலை ஆறரை மணிக்கெல்லாம் அபிராமி திரையரங்கில் (புரசைவாக்கம்) இருக்குமாறு அவரிடம் சொல்லியிருக்கிறேன்//
சுரேஷ் கண்ணன் கேட்டுக்கொண்டபடி அவரது நண்பர் செல்வமணி மாலை 6 மணி காட்சி பார்க்கப்போகிறார்.
இது தகவலுக்காக.
ச.சங்கர் அறிவித்துள்ள துணைப்போட்டிக்காக இதுவரை எந்த எண்ட்ரியும் வரவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ச.சங்கர் சார்பாக துணைப்போட்டிக்கு ஒரு எண்ட்ரியும் இந்த நிமிடம்வரை வராததால் இன்று மாலை 7 மணிக்கு சென்னையில் ராவணன் பார்க்கும் வாய்ப்பினை யாராவது ஒரு வலைப்பதிவருக்கு வழங்கலாம் என கம்பெனி(?!) முடிவெடுத்துள்ளது.
யாரை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஐடியா சொல்லி யாராவது உதவி ஒத்தாசை பண்ணுங்கப்பா!
Post a Comment